×

உண்மை அனாதையாகப் போய்க் கொண்டிருக்கும்!

இன்று கடவுளின் பிறந்தநாள் விழா! ‘‘ஓ! அப்படியா? ஆமாம். இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்த வழியே மாபெரும் ஊர்வலம் ஒன்று வரப்போகிறது. அதில் கடவுளும் கலந்துகொள்கிறார். இதைக்கேட்டதும் அவருக்கு ஆர்வம் அதிகமானது. சாலை ஓரமாக ஒதுங்கி நின்றுகொண்டார். சிறிது நேரத்தில் ஊர்வலம் வந்தது. முதலில் வந்த குதிரையின் மீது ஒருவர் கம்பீரமாக அமர்ந்திருந்தார். அவரைப் பின் தொடர்ந்து நிறைய பேர் வந்து கொண்டிருந்தனர். இவருக்குப் பின்னால் இவ்வளவு கூட்டம் நடந்து வருகிறதே! யார் இவர்? என்று விசாரித்தார். பார்த்துக் கொண்டிருந்தவர் இவர், ‘‘மறுவாழ்வு சபை’’தலைவர். அவரைப் பின்பற்றும் மக்கள் கூட்டம் அவரைத் தொடர்கிறது என்று விவரம் சொன்னார்கள். அடுத்தபடியாக இன்னொருவரும் குதிரையில் அமர்க்களமாக வந்தார். அவருக்குப்பின்னாலும் ஏகப்பட்டக் கூட்டம். இவர் யார்? இவர், ‘‘குணமளிக்கும் வல்லவர் சபை’’ தலைவர். அவரது வழியைப் பின்பற்றுவோர் அவரைப் பின்தொடர்கிறார்கள் என்று விவரித்தனர்.

இப்படி ஒவ்வொருவராக குதிரை மீது வலம் வந்தார்கள். அவர்களைப் பின்பற்றி ஒரு பெரிய கூட்டம் வந்துகொண்டிருந்தது. ஒரு வழியாக அந்த நீண்ட ஊர்வலம் முடிந்தது. சிறிது நேரம் கழித்து வயதான ஒருவர் குதிரை மீது வந்துகொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் எவருமே இல்லை. மிகவும் பரிதாபமாக பந்தா இல்லாமல் அமைதியாக தனியே வந்துகொண்டிருந்த அவர் ஊர்வலத்தைச் சேர்ந்தவரா இல்லையா என்பதே தெரியவில்லை. இவர் யார்? ஏன் இப்படி தனியே கூட்டமில்லாமல் வந்துகொண்டிருக்கிறார்? என்று கேட்டார் பார்வையாளர். கூட்டத்தில் ஒருவர் சொன்னார். என்ன இப்படிக் கேட்கிறீர்கள்? ‘‘இவர்தான் கடவுள்.’’ முன்னால் போகும் கூட்டமெல்லாம் இவரது பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டு போகிறவர்கள். இதைக் கேட்டதும் பார்வையாளர் மயங்கி விழாத குறையாக நின்றார். அப்புறம் யோசித்துப் பார்த்தார்.

‘‘தான் உண்மைக்குப் பின்னால் போய்க்கொண்டு இருப்பதாக நிறைய பேர் சொல்கிறார்கள்.’’ ஆனால் அந்த உண்மை ‘‘அனாதையாகப் போய்க்கொண்டு இருக்கிறது. கடவுளைப் பின்பற்றுவதாகப் பக்தர்கள் நினைக்கிறார்கள். ஆனால், கடவுளுக்குப் பின்னால் எவருமே இல்லை. ‘‘உரக்கக்கூறு’ என்றது ஒரு குரல். எதை நான் உரக்கக் கூறவேண்டும்? என்றேன். மானிடர் அனைவரும் புல்லே ஆவர். அவர்களின் மேன்மை வயல்வெளிப்பூவே! ஆண்டவரின் ஆவி இறங்கி வரவே புல் உலர்ந்துபோகும். பூவாக விழும்; உண்மையில் மானிடர் புல்லே ஆவர். ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும். இதோ! என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார். அவர் ஆற்றலோடு ஆட்சி புரிய இருக்கின்றார். அவர் தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார். அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன. ஆயனைப்போல் தன் மந்தையை அவர் மேய்ப்பார். ஆட்டுக்குட்டிகளைத் தன் கையால் ஒன்று சேர்ப்பார். அவற்றைத் தன் தோளில் தூக்கிச் சுமப்பார். இணையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.’’  (ஏசாயா 40: 611)

‘‘மணவைப்பிரியன்’’ஜெயதாஸ் பெர்னாண்டோ

Tags : orphan ,
× RELATED பள்ளிபாளையத்தில் ஆதரவற்ற முதியவர் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு