×

வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா நடத்த ஆலோசனை கூட்டம்: அதிகாரிகள் பங்கேற்பு

பெரம்பூர்: வியாசர்பாடியில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த ரவீஸ்வரர் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றதுவியாசர்பாடியில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த ரவீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஜூலை 2ம் தேதி பிரமோற்சவ விழாவை முன்னிட்டு, தேர் திருவிழா நடைபெற உள்ளது. 15 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேர் திருவிழாவில்  ரவீஸ்வரர் கோவிலில் இருந்து தேர் புறப்பட்டு வியாசர்பாடியில் முக்கிய வீதிகளின் வழியாக வீதியுலா செல்வது வழக்கம். இதற்காக  ரவீஸ்வரர் கோயில்  ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நேற்று மாலை 2வது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் தலைமை வகித்தார். இதில், தேர் திருவிழாவை எவ்வாறு நடத்துவது, தேர் ஊர்வலத்தின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பட்டாசுகள் வெடிப்பதை தவிர்ப்பது போக்குவரத்து மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது. அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து தேர் விழாவினை சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.  கூட்டத்தில், பெரம்பூர் வட்டாட்சியர் ஜெயலட்சுமி, மாமன்ற உறுப்பினர் ஆனந்தி, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஹரிபாபு, மாநகராட்சி பொறியாளர் பாபு, குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய செயற்பொறியாளர் அசோக் குமார், காவல்துறை சார்பில் இன்ஸ்பெக்டர் சதீஷ் தீயணைப்பு துறை சார்பில் செல்வம், கோயில் செயல் அலுவலர் ஆச்சி சிவப்பிரகாசம், மேலாளர் தனசேகர், திருக்கோயில் சிவக்குமார், சிவாச்சாரியர் நந்தகுமார் உள்ளிட்டோர் உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்….

The post வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா நடத்த ஆலோசனை கூட்டம்: அதிகாரிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Cheru festival ,Vyasarbadi Ravieswarar Temple ,Perampur ,Vyasarbadi ,orthodox Ravieswarar Temple Chore festival ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு