×

சூறாவளி காற்றுடன் மழை 10 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்

திருபுவனை: திருபுவனை தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதில் குச்சிப்பாளையம் கிராமத்தில் வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன. இக்கிராமத்தில் அதிகளவில் வாழை மற்றும் கரும்பு பயிரிடப்பட்டு இருந்தது. பலத்த காற்றினால் 10 ஏக்கருக்கு மேல் வாழை மரம் முறிந்து விழுந்தது. 20 ஏக்கருக்கு மேல் கரும்பு் அடியோடு சாய்ந்து முற்றிலும் சேதமடைந்தன. இதனால் இப்பகுதி விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. வாழையை ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரையிலும், கரும்பை ரூ. 75 ஆயிரம் வரையிலும் செலவு செய்து விவசாயிகள் அறுவடை செய்ய தயாராக இருந்தனர். ஆனால் சூறாவளி காற்றினால் விவசாயிகள் பெரிய அளவில் நஷ்டம் அடைந்துள்ளனர். வேளாண் அதிகாரிகள், சேதமடைந்த வாழை, கரும்பு பயிர்களை பார்வையிட்டு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல், சூறாவளி காற்றுக்கு திரும்புவனை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த தேக்கு மரம் சாய்ந்து, பக்கத்தில் இருந்த மின்கம்பத்தில் விழுந்து மின்தடை ஏற்பட்டது. திருமுருகன் நகர் பகுதியில் இருந்த மரங்கள் வேருடன் சாய்ந்தது. சன்னியாசிகுப்பம் இந்திரா நகர் பகுதியில் பனை மரம் சாய்ந்து 3 மின்கம்பங்கள் பழுதடைந்தன. இதனால் அப்பகுதி இருளில் மூழ்கியது. திருபுவனை மற்றும் சுற்றுப்புற பகுதியில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்….

The post சூறாவளி காற்றுடன் மழை 10 ஏக்கர் வாழை மரங்கள் சேதம் appeared first on Dinakaran.

Tags : Thirupuvana ,Saffaffa ,Dinakaran ,
× RELATED இனிமையான வாழ்க்கைத்துணை தரும் திருமணப் பொருத்தம்