×

தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி

மதுரை: கொடைக்கானல் மலைப்பகுதியில் உற்பத்தியாகும் மஞ்சளாறு ஆற்றின் குறுக்கே 3 புதிய தடுப்பணைகள் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இந்த தடுப்பணைகளால் பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு தண்ணீர் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்படும். எனவே, மஞ்சளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட தடை விதிக்க வேண்டும். ’’ என ஐகோர்ட் மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  இந்த மனுக்கள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘சுற்றுப் பகுதியில் அதிக ஆழத்திற்கு போர்வெல் போடப்படுகிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் ேநாக்கத்திற்காக மட்டுமே 3 தடுப்பணைகளும் கட்டப்படுகின்றன. தடுப்பணைகளால் தண்ணீர் செல்வது பாதிக்காது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘தண்ணீர் தேக்கி வைப்பதற்காகத் தான் தடுப்பணை கட்டப்படுகிறது. தங்களுக்கு தண்ணீர் வருவது பாதிக்கும் என்ற யூகத்தின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன’’ என உத்தரவிட்டனர். …

The post தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Manchalaru river ,Kodaikanal hills ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை