×

காக்கவாக்கம் கிராமத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும்: கிராம மக்கள் வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை: காக்கவாக்கம் கிராமத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் காக்கவாக்கம் ஊராட்சியில் சுமார் 400.க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சார்ந்த 3000 மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் விநாயகர் கோயில் பகுதியில் உள்ள சுமார் 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட குடிநீர் தேக்க மேல்நிலை தொட்டி உள்ளது .தொட்டியில் சுத்தம் செய்யாத காரணத்தினால் மாசு ஏற்பட்டுள்ளது. வாரத்திற்கு ஒரு முறை தொட்டியை சுத்தம் செய்து குளோரின் மருந்து தெளித்து சுத்தம் செய்து நீர் நிரப்பி அதற்குப்பிறகுதான் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்ய வேண்டும். ஆனால் தற்போது அப்பகுதி மக்கள் சிலர், குடிநீர் தேக்க மேல்நிலை தொட்டியை பராமரிப்பதில்லை என்றும் மேலும் சில நேரங்களில் தூசிகள் தண்ணீரில் கலந்து வருவதாகவும் கூறுகின்றனர். மேலும் முறையாக குடிநீர் தொட்டியை பராமரிப்பு பணிகள் செய்து தரவேண்டும் எனவும் சில நேரங்களில் தண்ணீர் நிரம்பி கீழே வழிகிறது.  இதனை பணியாளர்கள் கண்டுகொள்வதில்லை என்றும் இப்படி கீழே வழியும் தண்ணீர் வீணாக செல்கிறது எனவும் அப்பகுதி மக்கள்  குற்றம் சாட்டியுள்ளனர்.எனவே உடனடியாக ஊராட்சி நிர்வாகம் குடிநீர் மேல்நிலை தொட்டியை சுத்தம் செய்து வர்ணம் பூசி தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post காக்கவாக்கம் கிராமத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும்: கிராம மக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Kakkavakkam ,Oothukottai ,Tiruvallur… ,Dinakaran ,
× RELATED ஆரணி பேரூராட்சி பஜார் பகுதியில்...