×

கெவி படத்தில் தேவா பாடிய மலைவாழ் மக்கள் கீதம்

சென்னை: தமிழ் தயாளன் எழுதி இயக்கியுள்ள படம், ‘கெவி’. ஆதவன், ஷீலா ராஜ்குமார், ஜாக்குலின், சார்லஸ் வினோத், சிதம்பரம் சங்கரபாண்டியன், ‘தர்மதுரை’ ஜீவா, விவேக் மோகன், உமர் பரூக் நடித்துள்ளனர். ஆர்ட் அப் ட்ரையாங்கிள்ஸ் பிலிம் கம்பெனி சார்பில் பெருமாள்.ஜி, ஜெகன் ஜெயசூர்யா, ஜெகசிற்பியன், வருண்குமார், ஆதவன், உமர் பரூக், மணி கண்ணன் இணைந்து தயாரித்துள்ளனர். ஜெகன் ஜெயசூர்யா ஒளிப்பதிவு செய்ய, பாலசுப்பிரமணியன்.ஜி இசை அமைத்துள்ளார். ராசி தங்கதுரை, கிருபாகரன் ஏசய்யா இணைந்து வசனம் எழுதியுள்ளனர்.

பசுமையான கொடைக்கானல் மலையிலுள்ள கெவி என்ற குக்கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்கள் வாழ்க்கையை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளது. அந்த மக்களின் வாழ்க்கையைச் சொல்லும் விதமாக, ‘மா மலையே-எங்க மலைச் சாமியே. ஓம் மடியில்-எங்க உசுரு கெடக்குதே. இத்துப்போன சாதிசனம் என்னைக்காச்சும் வாழுமா? மூங்கில் மரத்துல-உள்ள முள்ளு பழுக்குமா?’ என்ற பாடலை வைரமுத்து எழுத, இசை அமைப்பாளர் தேவா பாடினார். பாடலை எழுதிய வைரமுத்து, ‘இது மலைவாழ் மக்களின் கீதமாக இருக்கும்’ என்றுகூறினார்.

The post கெவி படத்தில் தேவா பாடிய மலைவாழ் மக்கள் கீதம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Deva ,Chennai ,Dayalan ,Aadhavan ,Sheela Rajkumar ,Jacqueline ,Charles Vinod ,Chidambaram Shankarapandian ,Dharmadurai' Jeeva ,Vivek Mohan ,Umar Farooq ,Perumal.ji ,Jagan ,Art Up Triangles Film Company ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஹேமா கமிட்டி விவகாரம் இழப்புகளை பற்றி...