×

தமிழ்நாடு அரசின் தாய் – சேய் நல பெட்டக டெண்டருக்கு எதிரான வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி

சென்னை: தமிழ்நாடு அரசின் தாய் – சேய் நல பெட்டக டெண்டருக்கு எதிரான வழக்கை  சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் தாய்-செய் நல பெட்டக டெண்டரை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது. தமிழ்நாடு அரசு சார்பாக தமிழக அரசு மருத்துவமனையில் பிறக்க கூடிய குழந்தைகளுக்கு 15 பொருட்களுடன் வழங்கக்கூடிய தாய்-சேய் நல பெட்டக திட்டம் என்பது கடந்த ஆட்சில் இருந்து வழங்கப்பட்டுவருகிறது. இந்த திட்டத்திற்கான பொருட்களை பல்வேறு நிறுவனங்களில் இருந்து பெற்றுவந்த நிலையில், இதற்கான டெண்டர் சமீபத்தில் கோரப்பட்டது. இந்த டெண்டரை எதிர்த்து தஞ்சாவூரை சேர்ந்த ஸ்ரீ சாந்தி சர்ஜிக் கேர் என்ற நிறுவனம்  மனுதாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை ஏற்றுக்கொண்டு விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் இருதரப்பு வாதங்களையும் கேட்டபிறகு, தற்போது தமிழக அரசின் தாய் – சேய் நல பெட்டகத்திற்கான டெண்டர் கூறுவதில் எந்தவிதமான எதிர்ப்பும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதில் குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளில் அரசுக்கு நிறுவனங்கள் 3.30 லட்சம் பெட்டகங்களை சப்லை செய்யவேண்டும் என்ற விதியுடன் கடந்தமுறை டெண்டர் வழங்கிய போது, அந்த விதியை மீறி குறைந்த அளவிலேயே தாய் – சேய் நல பெட்டகங்களை இந்த நிறுவனம் வழங்கியுள்ளதாக தமிழக அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தொழில்நுட்ப டெண்டரில் இருந்து ஸ்ரீ சாந்தி சர்ஜிக் கேர் என்ற நிறுவனத்தை நீக்கியிருப்பதாகவும், தொடர்ந்து இந்த டெண்டரை நடத்தி வேறு நிறுவனங்களுக்கு வழங்குவதில் எந்த பிரச்சையும் இல்லை என நீதிபதிகள் கூறியுள்ளனர். …

The post தமிழ்நாடு அரசின் தாய் – சேய் நல பெட்டக டெண்டருக்கு எதிரான வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Chennai iCort ,Tamil Nadu Government ,Thai Sei Welfare Court ,Chennai ,Chennai High Court ,Chennai iCourt ,Sei Welfare Box ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...