×

பாடகர் குல் ரஞ்சித் நடிகர் ஆனார்

சென்னை: கேரளாவைச் சேர்ந்த குல் ரஞ்சித் பாடகராக தனது கலைப் பயணத்தை தொடங்கினாலும் தற்போது நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் இசை ஆல்பம் மற்றும் குறும்படங்களில் நடித்த இவரை, இயக்குநர் அவதார் தமிழ் சினிமா மூலம் நடிகராக அறிமுகப்படுத்துவதற்காக தனது ‘கரா’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார். இந்தியாவின் முதல் முதலை திரைப்படம் என்ற அடையாளத்தோடு உருவாகும் ஆந்தாலாஜி வகை திரைப்படமான ‘கரா’-வில் மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக நடிக்க, ஜீவா வில்லனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் அறிமுக நடிகரான குல் ரஞ்சித் முக்கியமான வேடத்தில் 11 வயது சிறுமிக்கு தந்தையாக நடித்திருக்கிறார். தற்போது இயக்குநர் விஜய் விக்னேஷ் இயக்கும் படம் உள்ளிட்ட 2 புதிய படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். முதல் படம் வெளியாவதற்கு முன்பாகவே தொடர்ந்து பல பட வாய்ப்புகளை பெற்று வரும் குல் ரஞ்சித், தொடர்ந்து பின்னணியும் பாடுவேன் என்கிறார்.

The post பாடகர் குல் ரஞ்சித் நடிகர் ஆனார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Gul Ranjith ,Chennai ,Kerala ,Avatar Tamil Cinema ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED யானைகள், புலிகள் நடமாட்டத்தை...