×

யஷ் படத்தில் தாரா சுதாரியா

பெங்களூரு: ‘கே.ஜி.எஃப்’ படங்களில் நடித்ததன் மூலம், இந்தியா முழுவதும் பிரபலமான யாஷ், அடுத்து நடிக்கும் படம், ‘தி டாக்ஸிக்’. இதை கீது மோகன் தாஸ் இயக்குகிறார். இதில் நாயகியாக கியாரா அத்வானி நடிக்கிறார். சகோதரி கேரக்டரில் நயன்தாராவும் முக்கியமான வேடத்தில் இந்தி நடிகை ஹூமா குரேஷியும் நடிக்கின்றனர். 1950, 1970 காலகட்டங்களில் நடக்கும் போதை மாஃபியா பற்றிய படமான இதன் முக்கியமான காட்சிகள் இங்கிலாந்தில் படமாக்கப்பட இருக்கின்றன. இந்நிலையில், இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை தாரா சுதாரியா இன்னொரு ஹீரோயினாக இணைந்துள்ளார். யாஷுக்கு இந்தப் படத்தில் 2 நாயகிகள் என்று கூறப்படுகிறது.

The post யஷ் படத்தில் தாரா சுதாரியா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Dara Sudaria ,Yash ,Bengaluru ,India ,Keetu Mohan Das ,Kiara Advani ,Nayantara ,Tara Sudaria ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பராசக்தி ஷூட்டிங்கில் எனக்கு...