×

தக் லைஃப் படத்துக்கு சிம்பு டப்பிங்

சென்னை: கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, வையாபுரி, நாசர் உள்ளிட்டவர்கள் நடித்துவரும் படம் ‘தக் லைஃப்’. இயக்குனர் மணிரத்னம் இந்த படத்தின் மூலம் 34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கமல்ஹாசனுடன் இணைந்துள்ளார். இந்த படம் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக சிம்பு இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் சிம்பு இந்த படத்தின் டப்பிங் பணிகளை துவங்கியுள்ளதாக இன்ஸ்டாகிராமில் அப்டேட் தெரிவித்துள்ளார். இப்படத்தில் தனது காட்சிகளை முடித்திருக்கும் சிம்பு, டப்பிங் பணிகளையும் தொடங்கிவிட்டுள்ளார் சிம்பு அடுத்ததாக எஸ்டிஆர்48 படத்தில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் அடுத்தடுத்த இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றவும் கதை கேட்டு வருகிறார்.

The post தக் லைஃப் படத்துக்கு சிம்பு டப்பிங் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Simbu ,Chennai ,Kamal Haasan ,Trisha ,Abirami ,Vayapuri ,Nasser ,Mani Ratnam ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED முன்னோக்கி சிந்தித்தவர் பெரியார்: கமல்ஹாசன் பதிவு