×

கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி: உற்பத்தி, விநியோகம் செய்யலாம்: சீரம் நிறுவனத்துக்கு மருத்துவ பொருட்கள் கட்டுப்பாட்டு துறை அனுமதி

டெல்லி: கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியை உற்பத்தி, விநியோகம் செய்ய சீரம் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் தந்த நிலையில் அதன் உற்பத்தி, விநியோகத்துக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டத்துக்கு தடுப்பூசியை விநியோகிக்க மருத்துவ பொருட்கள் கட்டுப்பாட்டு துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த இரு தடுப்பூசிகளும் 110 சதவீதம் பாதுகாப்பானவை என மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு உறுதி அளித்துள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் இணைந்து தயாரித்த கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் சீரம் மருந்து நிறுவனம் பரிசோதனை மற்றும் உற்பத்தி செய்யும் உரிமத்தை பெற்றுள்ளது. இதேபோல் ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து கோவாக்சின் என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளன. ஆகவே அவசர கால பயன்பாட்டிற்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் தர மத்திய அரசுக்கு, மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.மேலும் உள்நாட்டு தயாரிப்பான பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்தலாம் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆகவே ஆக்ஸ்போர்டு – சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு மற்றும் விநியோகம் தொடங்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது….

The post கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி: உற்பத்தி, விநியோகம் செய்யலாம்: சீரம் நிறுவனத்துக்கு மருத்துவ பொருட்கள் கட்டுப்பாட்டு துறை அனுமதி appeared first on Dinakaran.

Tags : Covishield ,Delhi ,Covisfield ,Dinakaran ,
× RELATED கோவிஷீல்டு உற்பத்தி 2021 டிசம்பரிலேயே நிறுத்தம்: சீரம் நிறுவனம் விளக்கம்