×

படிதாண்டா பரமேஸ்வரி கோயிலில் பச்சை, பவளக்காளி திருநடனம்

கும்பகோணம்: கும்பகோணம் படிதாண்டா பரமேஸ்வரி கோயில் பச்சைகாளி, பவளக்காளி திருநடன உற்சவம் நேற்று நடந்தது. கும்பகோணம் கும்பேஸ்வரர் தெற்கு வீதியில் உள்ள படிதாண்டா பரமேஸ்வரி கோயிலில் ஒவ்வொரு தை மாதமும் காப்பு கட்டி உற்சவத்தை 7 நாட்கள் கொண்டாடுவது வழக்கம். அதன்படி இக்கோயிலின் கரக உற்சவத்துக்காக கடந்த 29ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.

அதைதொடர்ந்து நேற்று காலை கோயிலில் இருந்து சக்தி கரகம், தீப்பந்தம், அக்னி கொப்பரையுடன் பச்சைகாளி, பவளக்காளி திருநடனத்துடன் ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தது.

Tags : Pandhanda Parameshwari Temple ,coral reef ,
× RELATED தே. பவழங்குடியில் வெறிநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சம்