சென்னை: கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் சமீபத்தில் வெளிவந்தது. இந்த படத்தில் கமல்ஹாசன் எழுதி பாடிய ‘பத்தல…பத்தல…’ என்ற பாடல் வைரலாக பரவி சாதனை படைத்தது. இந்த பாடலை பார்வைத்திறன் குறைபாடுள்ள பாடகர் திருமூர்த்தி பாடி வீடியோவாக வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவும் வைரலாக பரவியது.இந்த நிலையில் கமல்ஹாசன் திருமூர்த்தியை தனது அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டினார். அதோடு முறைப்படி இசை கற்க வேண்டும் என்ற அவரது ஆசையை நிறைவேற்ற ஏ.ஆர்.ரஹ்மானுடன் தொடர்பு கொண்டு அவரின் கே.எம்.மியூசிக் பள்ளியில் திருமூர்த்தி இசை படிக்க ஏற்பாடு செய்துள்ளார். அதற்கான செலவையும் கமல் ஏற்றுக் கொண்டார்….
The post பார்வையற்ற பாடகர் இசை கற்க கமல் ஏற்பாடு appeared first on Dinakaran.