×

குறிஞ்சிப்பாடி அருகே விழுப்புரம்- நாகை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரம்

குறிஞ்சிப்பாடி :  விழுப்புரம்- புதுச்சேரி- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை(45ஏ) 6,300 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் திட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விழுப்புரம்- புதுச்சேரி- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை (45 ஏ) 194 கி.மீ., இரண்டு வழி சாலை, தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 6,300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 180 கி.மீ., தூரமாக மாற்றியமைக்கப்பட்டு, நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விழுப்புரம் முதல் புதுச்சேரி வரையிலான 29 கி.மீ., தூரத்திற்கு 1,013 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், புதுச்சேரி முதல் பூண்டியாங்குப்பம் வரை 38 கிலோ மீட்டர் தூரத்திற்கு 1,228 கோடி ரூபாய் செலவிலும், பூண்டியாங்குப்பம் முதல் சட்டநாதபுரம் பாளையம் வரை 56 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2,120 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரை 55.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2,004 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகள் நான்கு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.  ஜானகிபுரம் புறவழிச் சாலை சந்திப்பில் டிரம்பெட் ஃப்ளை ஓவர் எனப்படும் மேம்பாலம், காரைக்கால் உள்ளிட்ட 30 இடங்களில் ஃப்ளை ஓவர் எனப்படும் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. அதேபோல், விழுப்புரம் பைபாஸ் அருகே மூன்று இடங்களிலும், கடலூர் பைபாஸ் ஆகிய மூன்று இடங்களிலும், சீர்காழி பைபாஸ் அருகே மூன்று இடங்களிலும் ரயில்வே பாலங்கள் அமைக்கப்படவுள்ளன.33 இடங்களில் மேம்பாலங்கள் மற்றும் சிறு பாலங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடக்கின்றன. தென்பெண்ணை ஆறு, கெடிலம் ஆறு, உப்பனாறு, கொள்ளிடம் உட்பட 11 இடங்களில் ஆற்றுப்பாலங்கள் அமைக்கப்படுகின்றன. இதில், குள்ளஞ்சாவடி அருகே அன்னவல்லி கடலூர்- சேலம் புறவழிச்சாலை (532) சந்திப்பில் மேம்பாலம் ஃபைல் பணிகள் நிறைவடைந்தன. மேம்பாலத்திற்கான கார்டர் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன….

The post குறிஞ்சிப்பாடி அருகே விழுப்புரம்- நாகை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Villupuram-Nagai National Highway ,Kurinchipadi ,Villupuram-Puducherry ,Nagapatnam National Highway ,45A ,
× RELATED என்எல்சி சார்பில் கட்டப்பட்டது அரசு...