வந்தவாசி அருகே பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்

வந்தவாசி: வந்தவாசி  அடுத்த மேல்பாதி கிராமத்தில் ஸ்ரீமரகதவல்லி சமேத ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வந்தவாசி அடுத்த மேல்பாதி கிராமத்தில் ஸ்ரீமரகதவல்லி சமேத ஸ்ரீவிஜயராகவப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் மஹா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.  இதையொட்டி விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரகம் ஹோமம், தனபூஜை, கஜபூஜை, லட்சுமி ஹோமம், கோபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் வந்தவாசி, வடவணக்கம்பாடி, தக்கண்டராயபுரம்  உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்கதர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

× RELATED வரதராஜ பெருமாள் கோயிலில் நாளை தேரோட்டம்