×

மீன் வியாபாரி திடீர் மரணம்

பெரம்பூர்: கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 5வது பிளாக் பகுதியை சேர்ந்த செந்தூர்பாண்டி (50), தினமும் காசிமேட்டில் இருந்து மீன் வாங்கி வந்து கொடுங்கையூர் திரு.வி.க நகர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில், தனது இருசக்கர வாகனத்தில் வைத்து வியாபாரம் செய்து வந்தார். அதன்படி, நேற்று முன்தினம் கொளத்தூர் பாலாஜி நகர் 6வது குறுக்கு தெரு அருகே மீன் வியாபாரம் செய்தபோது, திடீரென மயங்கி கீழே விழுந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கொளத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post மீன் வியாபாரி திடீர் மரணம் appeared first on Dinakaran.

Tags : Perambur ,Senthurpandi ,Kodunkaiyur Muthamil Nagar ,block ,Kasimet ,
× RELATED போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பருக்கு சரமாரி கத்திக்குத்து: வாலிபர் கைது