×

‘தருமம் மறுபடியும் வெல்லும்’… அதிமுகவில் தற்போது சர்வாதிகார, அராஜகப் போக்கு நிலவி வருவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் கண்டனம்!!

சென்னை :  ‘தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்’ என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ட்வீட் செய்துள்ளார். ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகளிர் அணியினர் மாண்புமிகு அம்மா அவர்களின் நினைவிடத்திற்கு சென்றபோது தேனாம்பேட்டை, வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவரும்,தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக இணைச் செயலாளருமான திரு.கேசவன் அவர்கள் தீக்குளிக்க முயன்றதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கழகத் தொண்டர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.ந்த தருணத்தில், ‘தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்’ என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்,’ எனப் பதிவிட்டுள்ளார். அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னையில் ஜூன் 23ந்தேதி (நாளை) நடைபெற உள்ள நிலையில், அண்மையில் ஒற்றைத் தலைமை சர்ச்சை வெடித்துள்ளது. ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சமரசம் செய்ய எடப்பாடி தரப்பினர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இரட்டை தலைமையில் உறுதியாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தனக்கு எதிராக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்று கருதுகிறார். எனவே 23ம் தேதி (நாளை) நடத்த திட்டமிட்டுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஓ பன்னீர் செல்வம் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பொதுக்குழு கூட்டத்தையே முடக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது….

The post ‘தருமம் மறுபடியும் வெல்லும்’… அதிமுகவில் தற்போது சர்வாதிகார, அராஜகப் போக்கு நிலவி வருவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் கண்டனம்!! appeared first on Dinakaran.

Tags : Dharma ,Coordinator ,O Bannir ,Chennai ,O Banneer ,O Panneer ,Dinakaran ,
× RELATED மழையால் பாதிக்கப்பட்ட கோடைசாகுபடி...