- பிரமேது பாமு
- லயன் இ.நடராஜ்
- என்.ராசா
- அக்ஷயா மூவி மேக்கர்ஸ்
- ஈ.கே.முருகன்
- தமன்குமார்
- ஸ்வேதா டோரதி
- ரஞ்சனா நாச்சியார்
- கருப்பு பாண்டி
- பிரமேது
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
சென்னை: அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் லயன் ஈ.நடராஜ், ந.ராசா இணைந்து தயாரித்துள்ள படம், ‘பார்க்’. ஈ.கே.முருகன் எழுதி இயக்கியுள்ளார். தமன் குமார், ஸ்வேதா டோரத்தி, ரஞ்சனா நாச்சியார், பிளாக் பாண்டி நடித்துள்ளனர். இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் ஆர்.வி.உதயகுமார், சிங்கம்புலி, சரவண சுப்பையா, தயாரிப்பாளர் அன்பழகன், அஜய் பிலிம் பேக்டரி அஜய், இசை அமைப்பாளர் அமரா, ஒளிப்பதிவாளர் பாண்டியன் குப்பன், கலந்துகொண்டனர். அப்போது ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’ படங்களின் இயக்குனர் பேரரசு பேசியதாவது: இப்போது நிறைய இயக்குனர்கள் நடிகர்களாகி விட்டனர்.
ஹீரோயின் ஸ்வேதா கொழுகொழுவென்று இருக்கிறார். அப்போதெல்லாம் குஷ்பு, ஜோதிகா போன்றவர்கள் கொழுகொழுவென்று இருப்பார்கள். பிறகு திரிஷா, சிம்ரன் போன்றோர் இளைத்தவர்களாக இருப்பார்கள். கொழுகொழுவென்று இருந்தால் மக்களுக்குப் பிடிக்கும். ஸ்வேதா அதுபோல் இருக்கிறார். சினிமாவில் இயக்குனருக்கு கதைபிடிப்பும், கதாநாயகிக்கு சதைபிடிப்பும் தேவை. 2வது கதாநாயகி கன்னடத்துப் பைங்கிளி. தமிழை கொஞ்சிக்கொஞ்சி பேசினார். கேட்பதற்கு அழகாக இருந்தது. நாங்கள் மொழி பேதம் பார்ப்பதில்லை. சரோஜாதேவியை கன்னடத்துப் பைங்கிளி என்று கொண்டாடினோம். எனவே, உங்களையும் வரவேற்போம்’ என்றார். பேரரசுவின் இந்த பேச்சு சமூக வலைத்தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post கதாநாயகிக்கு சதைபிடிப்பு தேவை; கொழு கொழு நடிகைகள்தான் மக்களுக்கு பிடிக்கும்: இயக்குனர் பேரரசு பேச்சு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.