மும்பை: கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாகத் திகழ்கிறார். அவரும், தெலுங்கு முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து அவர்கள் வெளிப்படையாக எதுவும் பேசவில்லை. தெலுங்கில் ‘புஷ்பா 2: தி ரூல்’, ‘தி கேர்ள் பிரெண்ட்’, ‘ரெயின்போ’, இந்தியில் ‘சாவ்வா’, ‘அனிமல் 2’, ‘சிக்கந்தர்’ மற்றும் தெலுங்கு, இந்தி, தமிழில் ‘குபேரா’ ஆகிய படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனாவுக்கு இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தி படப்பிடிப்பு சம்பந்தமாக மும்பைக்கு வந்த அவரை, விமான நிலையத்தில் சில ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு செல்ஃபி எடுக்க முயற்சித்தனர். இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக ராஷ்மிகா மந்தனா அதிருப்தி அடைந்தார். பிறகு சமாளித்துக்கொண்டு, தனது முகத்தில் அணிந்திருந்த மாஸ்க்கை நீக்கினார். தொடர்ந்து சில ரசிகர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுக்க போஸ் தந்தார். சிலர் அவரை நெருங்கி, தொட்டுப் பார்க்க முயற்சித்தனர்.
அப்போது அவர்களிடம் இருந்து ராஷ்மிகா மந்தனா விலகி நடந்து சென்றார் என்றாலும், ஒரு ரசிகர் அவரது வலது கையைத் தொட்டு உரசி அத்துமீறி, செல்ஃபி எடுக்க போஸ் தரும்படி கேட்டார். சில பாதுகாவலர்கள் இருந்தும் ரசிகர்கள் இப்படி எல்லைமீறியதை நேரில் பார்த்த ராஷ்மிகா மந்தனா எரிச்சல் அடைந்தார். எனினும், தனது கோபத்தை வெளிப்படுத்த விரும்பாத அவர், விமான நிலையத்திலேயே கடைசிவரைக்கும் பொறுமையாக நின்று ரசிகர்களுக்கு போஸ் கொடுத்தார். இறுதியில், அவர்களை நோக்கி ‘பிளையிங் கிஸ்’ கொடுத்தபடி அங்கிருந்து உள்ளே சென்றார்.
The post மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு: ராஷ்மிகாவிடம் செல்ஃபி எடுக்க கையை தொட்டு அத்துமீறிய ரசிகர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.