×

டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் 12 மணி நேரம் மின்தடை

தண்டையார்பேட்டை: சென்னையில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையால், புதுவண்ணாரப்பேட்டை திருவள்ளுவர் குடியிருப்பு முதல் பிரதான சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பற்றி எரிந்ததுடன், வெடித்து சிதறியது. இதனால், அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதுபற்றி மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மழை பெய்து கொண்டே இருந்ததால் டிரான்ஸ்பார்மர் பழுதை சீரமைக்க முடியவில்லை.நேற்று காலை 10 மணிக்கு மின்வாரிய ஊழியர்கள் டிரான்ஸ்பார்மர் பழுதை சரி செய்ததையடுத்து, அந்த பகுதிக்கு மின் விநியோகம் செய்யப்பட்டது….

The post டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் 12 மணி நேரம் மின்தடை appeared first on Dinakaran.

Tags : PHANDDAIARBED ,Chennai ,Thiruvalluvar Residential ,Puduvanannarapet ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...