×

ராம் சரண், கியாரா அத்வானி நடித்த கேம் சேஞ்சர் பட ரிலீஸ் திடீர் மாற்றம்

ஐதராபாத்: கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிப்பில் ‘இந்தியன் 3’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ள ஷங்கர், தெலுங்கில் ‘கேம் சேஞ்சர்’ படத்தை இயக்கியுள்ளார். ராம் சரண் ஜோடியாக பாலிவுட் முன்னணி நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் அஞ்சலி, சமுத்திரக் கனி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த் மேகா, நவீன் சந்திரா, ஜெயராம், சுனில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரித்துள்ளார். தமன் இசை அமைத்துள்ளார்.

கடந்த 2021ல் இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் தொடங்கியது. 3 ஆண்டுகளாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் முடிந்தது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்குப் பிறகு வரும் டிசம்பர் மாதம் படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது படத்துக்கான பணி இன்னும் நிறைவுபெறாததால், அடுத்த ஆண்டு ஜனவரி 10ம் தேதி திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதே நாளில் சிரஞ்சீவி, திரிஷா, ஆஷிகா ரங்கநாத் நடிக்கும் ‘விஸ்வம்பரா’ என்ற பான் இந்தியா படம் திரைக்கு வருகிறது. ஒரேநாளில் தந்தை, மகன் நடித்த படங்கள் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

The post ராம் சரண், கியாரா அத்வானி நடித்த கேம் சேஞ்சர் பட ரிலீஸ் திடீர் மாற்றம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ram Charan ,Advani ,Hyderabad ,Shankar ,Kamal Haasan ,Kajal Aggarwal ,Kiara Advani ,Anjali ,Samudrak ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ‘வேள்பாரி’ நாவலை திருடுவதா? இயக்குனர் ஷங்கர் கடும் எச்சரிக்கை