×

மேக் இன் இந்தியா தயாரிப்புகளை உலகளவில் ஏற்றுக்கொள்வதையும் நாம் உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி:கோவிஷீல்டு, கோவாக்சின்  தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாடு, அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் பரிந்துரையை ஏற்று கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய அளவீட்டு மாநாட்டில் பிரதமர் மோடி கூறியதாவது:  உலகளாவிய தேவை மட்டுமல்லாமல், மேக் இன் இந்தியா தயாரிப்புகளை உலகளவில் ஏற்றுக்கொள்வதையும் நாம் உறுதி செய்ய வேண்டும். தரம் மற்றும் நம்பகத்தன்மையின் அடிப்படையில் பிராண்ட் இந்தியாவை நாம் பலப்படுத்த வேண்டும் என தேசிய அளவீட்டு மாநாட்டில் தொடக்க உரையின் போது பிரதமர் மோடி ​​வலியுறுத்தினார். இன்று, உலகளாவிய கண்டுபிடிப்பு தரவரிசையில் முதல் 50 நாடுகளில் இந்தியா உள்ளது. தொழில் மற்றும் நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு இந்தியாவில் பலப்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி ஆராய்ச்சியாளர்களை நினைத்து இந்தியா பெருமிதம் கொள்கிறது என கூறினார். உலகிலேயே மிகப்பெரிய தடுப்பு மருந்து விநியோகம் செய்யும் பணியை விரைவில் இந்தியா தொடங்கும் என மோடி அறிவித்தார்.மேலும் கொரோனாவை தடுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார நிறுவனம் வரவேற்பு தெரிவித்துள்ளது. அவசர பயன்பாட்டுக்காக தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கும் மத்திய அரசின் முடிவைவரவேற்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது….

The post மேக் இன் இந்தியா தயாரிப்புகளை உலகளவில் ஏற்றுக்கொள்வதையும் நாம் உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Make ,India ,PM Modi ,New Delhi ,GovShield ,Covaxin ,Dinakaran ,
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு செலுத்தும் வாக்குகள் வீணாவது உறுதி : பிரதமர் மோடி