×

வால்பாறையில் பூங்கா திறக்க விரைவில் நடவடிக்கை-ஆணையாளர் தகவல்

வால்பாறை :  வால்பாறை நகராட்சியில் பணிகள் முடிந்தும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பல மாதங்களாக வராத பூங்கா மற்றும் படகு இல்லத்தை நகராட்சி ஆணையாளர் பாலு ஆய்வு செய்தார். நகராட்சி தலைவர் அதிகாரிகளுடன் அவருக்கு காண்பித்து ஆலோசனை நடத்தினர். வால்பாறை காமராஜ் நகர் பொதுப்பணித்துறை வசம் உள்ள காலி இடத்தில், வால்பாறை நகராட்சியால் 4.26 ஏக்கர் பரப்பளவில், 2.58 கோடி செலவில் தாவரவியல் பூங்காவும்,  புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சி நீர்நிலை புறம்போக்கு இடத்தில் 4.2 ஏக்கர் பரப்பில், 3.47 கோடி மதிப்பீட்டில் சிறிய தடுப்பணை, (படகு துறை) பணிகள் முடிந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சிறிது பணிகள் முடித்தால் போதும் என்ற நிலையில் உள்ளது.  இந்நிலையில், பணிகள் முடிந்து விரைவில் முதல்வர் திறக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று வால்பாறை நகராட்சிக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆணையாளர் பாலு பூங்காவை ஆய்வு செய்தார். அவருடன் நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி செல்வம், துணைத்தலைவர் செந்தில் ஆகியோர் சென்றனர். நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் பூங்கா குறித்தும், படகு இல்லம் குறித்தும் நடப்பில் உள்ள விவரங்களை கூறினார்.பொதுப்பணித்துறை கோப்புகள் கிடப்பில் உள்ளதாக கூறப்பட்ட நிலையில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆணையாளர் தெரிவித்தார். கோப்புகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இந்த ஆய்வின்போது கவுன்சிலர் ரவிச்சந்திரன், கட்சி நிர்வாகிகள் டென்சிங், மகேந்திரன் உள்ளிட்ட பலர் இருந்தனர்….

The post வால்பாறையில் பூங்கா திறக்க விரைவில் நடவடிக்கை-ஆணையாளர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Walpara ,Valbara Municipality ,Dinakaran ,
× RELATED இணைந்திருக்கும் தெய்வீக இசை