×

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற சர்க்கரைத்துறை தொடர்பான ஆய்வுக்கூட்டம்..!

சென்னை: வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் இன்று (21.06.2022)  நந்தனம், சர்க்கரைத்துறை ஆணையர் அலுவலகத்தில், சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள், அரசால் செயல்படுத்தப்பட்டு வரும்  உழவர் நலத்திட்டங்கள், அரவைப்பணிகள், தொழில்நுட்ப செயல்திறன், கரும்பு பதிவு, சர்க்கரைக் கட்டுமானம், கரும்பு பகுதி ஒதுக்கீடு, கரும்பு நிலுவைத்தொகை, நிதி செயல்பாடு, இணைமின் திட்ட செயல்பாடுகள், எத்தனால் உற்பத்தியை மேம்படுத்துதல், சர்க்கரைத்துறை எதிர்கொள்ளும் சவால்கள், இயங்காமல் உள்ள சர்க்கரை ஆலைகளை இயக்கிடத் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், கரும்பு பயிரிடும் விவசாயிகளை ஊக்குவித்தல், அரவைக்கு ஆலை தகுதியாக உள்ளதா என அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு உரிய அறிவுரையின் அடிப்படையில் ஆலைகளை இயக்கிட நடவடிக்கை எடுத்தல், சர்க்கரை ஆலைகளில் உள்ள பணியாளர்களுக்கு பதவி உயர்வு, சர்க்கரை ஆலைகளின் மேம்பாட்டிற்கு முன்மொழியப்படும் ஆலோசனைகள் மற்றும் அரசு அறிவிப்புகளின் தற்போதைய நிலை உள்ளிட்ட செயல்பாடுகளை ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்கள். இக்கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர்/ சர்க்கரைத்துறை ஆணையர் திரு. ஹர்மந்தர் சிங், இ.ஆ.ப., வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் திரு. சி. சமயமூர்த்தி, இ.ஆ.ப., சர்க்கரைத்துறை கூடுதல் ஆணையர் திரு. த. அன்பழகன், இ.ஆ.ப., சர்க்கரைத்துறை கூடுதல் இயக்குநர் திருமதி வீ. தேவகி, தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணைய மேலாண்மை இயக்குநர் திருமதி ஆ.க.சிவமலர், தமிழ்நாடு சர்க்கரைக் கழக பொது மேலாளர் திரு. செ.இராஜேந்திரன் மற்றும்  சர்க்கரைத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்….

The post அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற சர்க்கரைத்துறை தொடர்பான ஆய்வுக்கூட்டம்..! appeared first on Dinakaran.

Tags : Minister ,MRK Panneerselvam ,Chennai ,Agriculture - Farmers' Welfare ,M.R.K. ,Panneerselvam ,Nandanam ,Commissioner of ,Sugar ,Department ,M.R.K. Panneerselvam ,Dinakaran ,
× RELATED அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம்...