×

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிப்பு

புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஏற்றுக்கொண்டதை அடுத்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வகையில் திரிணாமுல் கட்சியில் இருந்து இன்று காலை யஷ்வந்த் சின்ஹா விலகினார். ஆளும் கட்சி, எதிர்கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படாததால், இன்று இரு தரப்பிலும் குடியரசு தலைவர் பதவிக்கான வேட்பாளரை அறிவிக்க தாமதம் ஏற்பட்டது. இதற்காக ஆளும் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டமும், சரத்பவார் தலைமையில் எதிர்கட்சிகளின் கூட்டமும் டெல்லியில் நடைபெற்றது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடியும் நிலையில், நாட்டின் புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 21-ம் தேதி நடக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் வரும் 29-ம் தேதியாகும். ஆளும்கட்சி – எதிர்கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படாத நிலையில், குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் நடப்பது உறுதியாகி உள்ளது. ஆளும் பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர், ஆளும் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள், எதிர்கட்சி தலைவர்களுடன் குடியரசு தலைவர் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை நடத்த நியமிக்கப்பட்டனர்.அதேநேரம் குடியரசு தலைவர் தேர்தல் பணிகளை மேற்கொள்ள ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில் 14 பேர் கொண்ட மேலாண்மை குழுவை பாஜக தேசிய தலைமை அறிவித்தது. இக்குழுவில், ஒன்றிய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, அஸ்வினி வைஷ்ணவ், சர்பானந்த சோனோவால், அர்ஜுன் ராம் மேக்வால், பாரதிபவார், தேசிய பொதுச் செயலாளர்கள் வினோத் தாவ்டே, சி.டி.ரவி, தருண் சுக், தேசிய துணைத் தலைவர் அருணா, தேசிய செயலாளர் ரிதுராஜ் சின்ஹா, தேசிய செய்திதொடர்பாளர் சம்பித் பத்ரா, அசாம் மாநில துணைத் தலைவர் ராஜ்தீப் ராய், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ ஆகிய 14 பேர் இடம்பெற்றுள்ளனர்.இந்த நிலையில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் பதவிக்கான வேட்பாளரை தேர்வு செய்யும் பணி இறுதிகட்டத்தை எட்டியது. அதையடுத்து இன்று மாலை பாஜகவின் நாடாளுமன்றக் குழு கூடுகிறது. கர்நாடகாவில் உள்ள பிரதமர் மோடி காணொலி மூலம் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. அப்போது குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் யார்? என்பது தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பெயர் அறிவிக்க வாய்ப்புள்ளது. மேலும் குடியரசுத் தலைவர் வேட்பாளராக யாரை நிறுத்தினாலும், அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பிரசாரம் செய்ய தேசிய ஜனநாயகக் கூட்டணி திட்டமிட்டுள்ளது. பாஜகவுக்கு ஆதரவாக இருக்கும் பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவளிக்க வாய்ப்புள்ளதால், அந்த வேட்பாளரே குடியரசு தலைவராக தேர்வாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.இதற்கிடையே எதிர்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்துவதற்காக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி முயற்சிகளை மேற்கொண்டார். டெல்லியில் 22 கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். எதிர்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ஆகியோரின்பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.ஆனால் அவர்கள் இருவரும் குடியரசு தலைவர் வேட்பாளராக போட்டியிட விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டனர். கடைசி வாய்ப்பாக நேற்று மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தியின்பெயரும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அவரும் போட்டியிட விருப்பமில்லை என்று தெரிவித்துவிட்டார்.இவ்வாறாக எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் குறித்த குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில், இன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தலைமையில் எதிர்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. ஆனால் மம்தா பானர்ஜி கலந்து கொள்ளவில்லை. இன்றைய கூட்டத்தில் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் யார்? என்பது இறுதிசெய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதற்கேற்றால் போல் பாஜகவில் இருந்து திரிணாமுல் கட்சியில் சேர்ந்த அந்த கட்சியின் துணைத் தலைவரான யஷ்வந்த் சின்ஹா இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘தேசப்பணிக்காகவும், எதிர்கட்சிகளின் ஒற்றுமைக்காகவும் செயல்படுவதற்கான நேரம் வந்துவிட்டது. அதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிப் பதவியில் இருந்து விலகுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். எனவே, எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா குடியரசு தலைவர் வேட்பாளராக இருப்பார் என்பது உறுதியானது. இதனை தொடர்ந்து இன்று மாலை எதிர்கட்சி தரப்பில் அதிகாரபூர்வமாக யஷ்வந்த் சின்ஹாவை குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். யஷ்வந்த் சின்ஹா 2018-ம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகி 2021-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். யஷ்வந்த் சின்ஹா நரேந்திர மோடி பிரதமர் ஆன பிறகு அவரை கடுமையாக விமர்சனம் செய்துவந்தார். எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிடும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று காலை யஷ்வந்த் சின்ஹா விலகினார். …

The post ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Yashwant Sinha ,New Delhi ,Dinakaran ,
× RELATED ஏர்லைன்ஸ்களில் கலக்கும் ஏஐ;...