லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகம் முழுக்க வெற்றிகரமாக ஓடி வசூலில் அதிக சாதனை படைத்த ‘டைட்டானிக்’, ‘அவதார்’ ஆகிய படங்களின் தயாரிப்பாளர் ஜான் லாண்டாவ் (63) புற்றுநோய்க்கு பலியானார். இந்த தகவலை அவருடைய மகன் ஜேமி லாண்டாவ் உறுதி செய்துள்ளார். ஜான் லாண்டாவ் கடந்த வெள்ளி அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் உயிரிழந்துள்ளார். அவர், ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் நீண்ட கால நண்பராவார். கடந்த 1960 ஜூலை 23ம் தேதி நியூயார்க்கில் பிறந்தவர், ஜான் லாண்டாவ்.
அவரது பெற்றோர் எலி லாண்டாவ், எடி லாண்டாவ் ஆகிய இருவரும் அமெரிக்க பிலிம் தியேட்டர் தொடங்கி படங்கள் தயாரித்தனர். பிறகு ஜான் லாண்டாவ் பாரமவுண்ட் பிக்சர்ஸ்சுடன் இணைந்து, 1987ல் ‘கேம்பஸ் மேன்’ என்ற ஹாலிவுட் படத்தின் மூலம் தயாரிப்பாளர்ஆனார். டிஸ்னி பிக்சர்ஸ்சுடன் இணைந்து 2 படங்கள் தயாரித்தார். தவிர, ‘அவதார்’ படத்தின் அடுத்தடுத்த பாகங்களை தயாரிப்பதில் தீவிரம் காட்டினார். இந்நிலையில் அவர் உயிரிழந்தது ரசிகர் களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
The post டைட்டானிக், அவதார் படங்களின் தயாரிப்பாளர் புற்றுநோய்க்கு பலி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.