×

கோடை சீசனுக்காக இயக்கப்பட்ட ஊட்டி-கேத்தி சிறப்பு ரயில் நிறுத்தம்

ஊட்டி: கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி-கேத்தி இடையே இயக்கப்பட்ட சிறப்பு மலை ரயில் நேற்றுடன் நிறுத்தப்பட்டது. ஊட்டியில் கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஊட்டி- கேத்தி- ஊட்டி இடையே 3 சுற்றுகள் முன்பதிவு செய்யப்பட்ட ஜாய் ரைடு சிறப்பு ரயில் கடந்த மாதம் 22ம் தேதி முதல் இயக்கப்பட்டது. ஜூலை 21ம் தேதி வரை இயக்கப்படும் என ரயில்வே அறிவித்திருந்தது. ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்பட்டன. கோடை சீசன் போது ஊட்டிக்கு வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இதில் பயணித்து மகிழ்ந்தனர். கடந்த ஒரு மாதமாக ரயில் இயக்கப்பட்டு வந்த நிலையில் கோடை சீசன் நிறைவடைந்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இதனால், ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. இதனை தொடர்ந்து நேற்று (19ம் தேதியுடன்) சிறப்பு ரயில் நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறித்துள்ளது….

The post கோடை சீசனுக்காக இயக்கப்பட்ட ஊட்டி-கேத்தி சிறப்பு ரயில் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Ooty-Kethi ,Ooty ,Kethi ,Ooty… ,Dinakaran ,
× RELATED குன்னூர், ஊட்டியில் குவிந்த சுற்றுலா...