×

6 வழிச்சாலையை ரத்து செய்ய வலியுறுத்தி 20 கிராமங்களில் விவசாயிகள் பிரசாரம்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே 6 வழிச்சாலையை ரத்து செய்ய வலியுறுத்தியும், மாற்று பாதையில் சாலை அமைத்திட கோரியும் விவசாயிகள் பைக் மூலம் 20 கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டனர். திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 128 கி.மீ தூரத்திற்கு ரூ.3,200 கோடி செலவில் 6 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்க தமிழக அரசும், ஆந்திர அரசும் இணைந்து தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற முடிவு செய்துள்ளது. இதற்காக ஊத்துக்கோட்டை வட்டத்தில் மட்டும் 6 வழிச்சாலைக்காக 18 கிராமங்கள் பாதிக்கப்படுகிறது. பள்ளிப்பட்டு மற்றும் பொன்னேரி வட்டத்தில் தலா 6 கிராமங்களும் பாதிக்கப்படுகிறது.மேலும் ஆலப்பாக்கம் பகுதியில் 6 வழிச்சாலைக்காக கடந்த 14ம் தேதி சாலை பணிகள் செய்தனர். இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்காலிகமாக பணிகள் நிறுத்தப்பட்டது.இந்நிலையில், நேற்று முப்போகம் விளையும் நிலத்தை சீரழித்து குடிநீர் ஆதாரங்களை சேதாரம் செய்து அமைக்க உள்ள தச்சூர் – சித்தூர் 6 வழிச்சாலை பணிகளை உடனே நிறுத்தவேண்டும்.இந்த சாலையை மாற்றுப்பாதையில் அமைத்திடவேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகளுக்கு ஆதரவாக சிபிஐஎம் மற்றும் ஊத்துக்கோட்டை நஞ்சை நல விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஒரு நாள் பைக் பிரசாரம் ஆலப்பாக்கம் கிராமத்தில் வட்ட செயலாளர் ஏ.ஜி.கண்ணன் தலைமையில் நடந்தது. இதனைத்தொடர்ந்து, ஆலப்பாக்கம், வடமதுரை, பெரியபாளையம், தண்டலம், பருத்திமேனிக்குப்பம், சென்னங்காரணி, தும்பாக்கம், ஊத்துக்கோட்டை, மேலக்கரமனூர், போந்தவாக்கம், ராமலிங்காபுரம் உள்ளிட்ட 20 கிராமங்களில் விவசாயிகள் பைக் மூலம் பிரசாரம் செய்தனர்….

The post 6 வழிச்சாலையை ரத்து செய்ய வலியுறுத்தி 20 கிராமங்களில் விவசாயிகள் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Oothukottai ,Periyapalayam ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து