×

ஏலகிரி மலையில் வார விடுமுறையால் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஜோலார்பேட்டை : திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. 14 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட ஏலகிரி மலை 14 கிராமங்களை உள்ளடக்கி தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. மேலும் இங்குள்ள மக்களின் முக்கிய தொழிலாக விவசாயம் விளங்கி வருகிறது. இது ஒரு சுற்றுலாத் தலம் என்பதால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். மேலும் சுற்றுலா பயணிகள் காணக்கூடிய முக்கிய இடங்களாக படகுத்துறை, சிறுவர் பூங்கா, இயற்கை பூங்கா, முருகன் கோயில், நிலாவூர் கதவு நாச்சி அம்மன் கோயில், ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களும், தனியார் பொழுதுபோக்கு கூடங்களும் அதிக அளவில் உள்ளன. இதனால் தங்கள் குழந்தைகளுடன் சுற்றுலா பயணிகள் நாள்தோறும் இங்குள்ள பல்வேறு இடங்களை கண்டு களித்து செல்கின்றனர். மேலும் கடந்த மாதம் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை இருந்ததால் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் தங்களின் குடும்பத்துடன் பல்வேறு இடங்களை கண்டு களித்து சென்றனர். இந்நிலையில் கடந்த சனி, ஞாயிறு இரண்டு நாள் விடுமுறை என்பதால் நேற்று கர்நாடகம், சென்னை, ஆந்திரா, பாண்டிச்சேரி, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்று கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் ஏலகிரி மலை சாலையில் கொண்டை ஊசி வளைவுகளில் ஆங்காங்கே வாகனங்கள் அணிவகுத்து சென்றன. மேலும் இங்குள்ள படகுத்துறை, சிறுவர் பூங்கா, இயற்கை பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களை தங்களது பிள்ளைகளுடன் கண்டு களித்து மகிழ்ந்தனர். மேலும் படகில் குடும்பத்துடன் சவாரி செய்தும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் இது மட்டுமல்லாமல் இங்கு உள்ள தனியார் பொழுதுபோக்கு கூடங்கள் அதிக அளவில் உள்ளதால் தங்களது குழந்தைகளின் தண்ணீர் தொட்டியில் படகில் விளையாட வைத்தும், செயற்கை நீர்வீழ்ச்சியில் குளித்தல் போன்றவைகளில் பொழுதுபோக்கை கழித்து உற்சாகமடைந்தனர். மேலும் சுற்றுலா தலமான ஏலகிரி மலையில் மாவட்ட நிர்வாகம் முதலைப்பண்ணை பாம்பு பண்ணை முயல் மான் உள்ளிட்ட விலங்குகள் பண்ணைகள் அமைத்து சுற்றுலா தளத்தை அதிக அளவில் மேம்படுத்த வேண்டும் என்றும் இயற்கை பூங்காவில் உள்ள பூந்தோட்டம், செயற்கை அருவி, செயற்கை நீரூற்று உள்ளிட்டவைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் இங்குள்ள பல்வேறு இடங்களை மேம்படுத்தி சுற்றுலாத்தலத்தை மேலும் மேம்படுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post ஏலகிரி மலையில் வார விடுமுறையால் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Elagiri ,Jolarbhet ,Thirupattur ,Jolarbate ,Chopper Needle ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவு!!