×
Saravana Stores

திருமணமாகி 8 நாட்களிலேயே சோனாக்‌ஷி கர்ப்பமா? நெட்டிசன்கள் கேள்வி

மும்பை: பாலிவுட் சீனியர் நடிகரும், அரசியல்வாதி யுமான சத்ருகன் சின்ஹா மற்றும் பாலிவுட் நடிகையும், அரசியல்வாதியுமான பூனம் சின்ஹா தம்பதியின் மகள் சோனாக்‌ஷி சின்ஹா (37), ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றினார். பிறகு 2010ல் ‘தபாங்’ என்ற இந்திப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி வெற்றிபெற்ற அவர், தொடர்ந்து பல படங்களில் நடித்தார். தமிழில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய ‘லிங்கா’ என்ற படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தார்.

இந்நிலையில் சோனாக்‌ஷி சின்ஹா, தனது காதலர் பாலிவுட் நடிகர் ஜாகீர் இக்பாலை கடந்த 23ம் தேதியன்று மும்பையில் பதிவுத்திருமணம் செய்தார். திருமணம் நடந்த ஒரே வாரத்தில் மும்பை தனியார் மருத்துவமனைக்கு சோனாக்‌ஷி சின்ஹா வந்து சென்றதால், தற்போது அவர் கர்ப்பமாக இருக்கிறாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், சோனாக்‌ஷி சின்ஹா ஏன் மருத்துவமனைக்கு வந்தார், அவருக்கு என்ன பிரச்னை என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

திரையுலகைப் பொறுத்தவரையில், திருமணத்துக்கு முன்பே சில நடிகைகள் கர்ப்பமாக இருப்பதும், பிறகு திருமணம் நடந்த சில மாதங்களிலேயே அவர்கள் குழந்தை பெற்றெடுப்பதும் சாதாரண விஷயமாகி விட்ட நிலையில், சோனாக்‌ஷி சின்ஹா விஷயத்திலும் அப்படி இருக்குமோ என்ற கேள்வி ரசிகர்கள், நெட்டிசன்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுவரை சோனாக்‌ஷி சின்ஹா தரப்பு பதிலளிக்கவில்லை.

The post திருமணமாகி 8 நாட்களிலேயே சோனாக்‌ஷி கர்ப்பமா? நெட்டிசன்கள் கேள்வி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sonakshi ,Mumbai ,Sonakshi Sinha ,Bollywood ,Yumana Shatrughan Sinha ,Poonam Sinha ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவு