×

நடிகை மது ஷாலினி திருமணம்

சென்னை: மது ஷாலினி, கோகுல் ஆனந்த் திருமணம் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அவன் இவன், விசித்திரன், பழனியப்பா கல்லூரி, பதினாறு, பிரம்மன், தூங்காவனம், பஞ்சராட்ஷரம் உள்ளிட்ட தமிழ் படங்களில் மது ஷாலினி ஹீரோயினாக நடித்துள்ளார். பஞ்சராட்ஷரம் படத்தில் மது ஷாலினியுடன் கோகுல் ஆனந்த் நடித்திருந்தார். அப்போது முதல் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. தொடர்ந்து சென்னை டு சிங்கப்பூர், திட்டம் இரண்டு, நடுவன் உள்ளிட்ட படங்களிலும் கோகுல் ஆனந்த் நடித்துள்ளார். இரு வீட்டாரும் இவர்களின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டினர். இதையடுத்து ஐதராபாத்தில் நேற்று முன்தினம் இவர்களின் திருமணம் நடைபெற்றது. இதில் இரு குடும்பத்தாரும், நண்பர்களும் கலந்துகொண்டனர்….

The post நடிகை மது ஷாலினி திருமணம் appeared first on Dinakaran.

Tags : Madhu Shalini ,Chennai ,Gokul Anand ,Hyderabad ,Avan Ivan ,Vishitran ,Palaniappa College ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்