×

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் வெஸ்ட்இண்டீஸ்

நார்த் சவுண்ட்: வெஸ்ட்இண்டீஸ்-வங்கதேசம் இடையே 2 டெஸ்ட் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் நார்த் சவுண்ட் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் வங்கதேசம் 103, வெஸ்ட்இண்டீஸ் 265 ரன்கள் எடுத்தன. தொடர்ந்து 162 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 2ம்நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 50 ரன் எடுத்திருந்தது. 3வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய வங்கதேச அணியில் நுருல் ஹசன் 64, கேப்டன் ஷகிப் அல் ஹசன் 63 ரன் எடுக்க 90.50 ஓவரில் 245ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் கீமர் ரோச் 5 , அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் 85 ரன் இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் நேற்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 49 ரன் எடுத்திருந்தது. இன்னும் 7 விக்கெட் கைவசம் உள்ள நிலையில் 35 ரன்களே தேவை என்பதால் வெஸ்ட்இண்டீஸ் வெற்றியின் விளிம்பில் உள்ளது. இன்று 4வதுநாள் ஆட்டம் நடக்கிறது….

The post வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் வெஸ்ட்இண்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,WestIndies ,North Sound ,North Sound Stadium ,West Indies ,Dinakaran ,
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...