×

வரத்து அதிகரிப்பால் குடோன்களில் தேங்காய்கள் தேக்கம்: பட்டிவீரன்பட்டி விவசாயிகள் கவலை

பட்டிவீரன்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி, தேவரப்பன்பட்டி, சேவுகம்பட்டி, அய்யம்பாளையம், மருதாநதி அணை பகுதி, சித்தரேவு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடந்து வருகிறது. இப்பகுதியில் உள்ள தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் தென்னை சார்ந்த மூலப்பொருட்களைக் கொண்டு, தென்னம்பாலை செய்தல், கிடுகு பின்னுதல், தென்னை மட்டைகளிலிருந்து கயிறு தயாரித்தல் போன்ற தொழில்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் தென்னை விவசாயத்தை நம்பியே உள்ளது. இப்பகுதி தென்னை விவசாயிகளிடமிருந்து, அய்யம்பாளையம் பகுதி மொத்த வியாபாரிகள் தேங்காய்களை கொள்முதல் செய்கின்றனர். கொள்முதல் செய்த தேங்காய்களை உரித்து மதுரை, ஈரோடு, காங்கேயம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், மும்பை, பெங்களுர் போன்ற வெளிமாநிலங்களும் தேங்காய்களை விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் தேங்காய்கள், அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி பகுதிகளில் உள்ள தனியார் குடோன்களில் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது பெய்து வரும் தொடர்மழை காரணமாக, தேங்காய் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் வெளிமாநிலங்களிலும் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி பகுதிகளில் உள்ள தென்னந்தோப்புகளிலும், குடோன்களிலும் தேங்காய்கள் தேக்கமடைந்துள்ளன. இதனால் அவற்றின் விலையும் சரிந்து வருகிறது. 3 மாதங்களுக்கு முன்பு ரூ. 12 வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட தேங்காய்கள், தற்போது ரூ.7 முதல் ரூ.8 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இதே போல் கொப்பரை தேங்காயின் விலையும் சரிந்து வருகிறது. தொடர்ந்து விலை இறங்குமுகத்தில் இருக்கும் என கூறப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்….

The post வரத்து அதிகரிப்பால் குடோன்களில் தேங்காய்கள் தேக்கம்: பட்டிவீரன்பட்டி விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Tags : Pattiveeranpatti ,Dindigul district ,Devarappanpatti ,Sevukambatti ,Ayyampalayam ,Marudhanadi dam ,Siddharevu ,Dinakaran ,
× RELATED இ-பாஸ் நடைமுறையால் கொடைக்கானலில்...