×

ஓராண்டில் 100க்கும் மேற்பட்ட ரோபோடிக் உதவியுடன் புற்றுநோய் அறுவை சிகிச்சை: கிளெனேகிள்ஸ் ஹெல்த்சிட்டி சாதனை: விழாவில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்பு

சென்னை, ஜூன் 24- 2024:சென்னையில் உள்ள கிளெனேகிள்ஸ் ஹெல்த்சிட்டி மருத்துவமனை கடந்த ஒரு வருடத்திற்குள் 100-க்கும் மேற்பட்ட ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சைகளை செய்து சாதனை படைத்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக நடைபெற்ற விழாவில் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதில் மூன்றாம் நிலை கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, இந்தியாவிலேயே முதன்முறையாக ஹைபர்தெர்மிக் இன்ட்ராபெரிட்டோனியல் கீமோதெரபி உடன் ரோபோடிக் சைட்டோரேடக்டிவ் அறுவை சிகிச்சை செய்துகொண்ட 82 வயது பெண்மணியும் கலந்து கொண்டார். அவருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை சமீபத்திய நான்காம் தலைமுறை ரோபோடிக் உடன் சமீபத்திய டா வின்சி ஷி சிஸ்டம் மூலம் செய்யப்பட்டது.

இது குறித்து நிகழ்ச்சியில் பேசிய கிளெனேகிள்ஸ் புற்றுநோய் நிறுவனத்தின் இயக்குனரும், கிளெனேகிள்ஸ் ஹெல்த்சிட்டி மருத்துவமனையின் புற்றுநோயியல் அறுவை சிகிச்சை தலைவரும் ரோபோடிக் திட்ட இயக்குனருமான டாக்டர் எஸ். ராஜசுந்தரம் கூறுகையில், இந்த நான்காம் தலைமுறை தொழில்நுட்பத்தின் மூலம், 100க்கும் மேற்பட்ட சிக்கலான மற்றும் வெற்றிகரமான ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சைகளை துல்லியமாக நாங்கள் செய்துள்ளோம்.

இவை நோயாளிகளின் சிரமங்களை வெகுவாக குறைத்துள்ளது. இந்த குறைந்தபட்ச ஆக்கிரமிப்பு அணுகுமுறை மூலம் குறைந்த நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யப்படுவதால் நோயாளிகள் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி இருக்காமல் ஒரு சில நாட்களிலேயே டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள். இந்த அறுவை சிகிச்சையானது ரத்த இழப்பைக் குறைப்பதோடு பிரச்சினைகளின் அபாயத்தையும் வெகுவாக குறைக்கிறது.

மேலும், எங்களால் செய்யப்படும் அனைத்து அறுவை சிகிச்சைகளும் சிறந்த பலன் அளிக்கக்கூடிய அறுவை சிகிச்சைகள் என்று உறுதியாகக் கூறலாம். ஏனெனில் கடந்த ஆண்டு அறுவை செய்து கொண்ட நோயாளிகள் யாருக்கும் எந்தவிதமான பின்விளைவுகளும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.

மேலும் டாக்டர் ராஜசுந்தரம் கூறுகையில், உணவுக்குழாய், வயிறு, பெருங்குடல், மலக்குடல் மற்றும் பெண்ணோயியல் புற்றுநோய்கள் உட்பட பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கும் ரோபோடிக் அறுவை சிகிச்சை சிறந்த பலனை அளிக்கிறது. இது நோயாளிகளின் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்துகிறது.

மேலும், 3D விஷன் மற்றும் உயர் உருப்பெருக்க திறன்களுடன் கூடிய ரோபோடிக் அமைப்புகளால் வழங்கப்படும் துல்லியம், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அறுவை சிகிச்சை துல்லியத்தை மேம்படுத்துகிறது. ரோபோ உதவியுடன் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவ நிபுணர்கள் எளிமையாகவும் துல்லியமாகவும் இந்த அறுவை சிகிச்சைகளை செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இம்மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் நாகேஸ்வர ராவ் கூறுகையில், மருத்துவத்தின் எதிர்காலம் எந்தவித சந்தேகமும் இல்லாமல் தொழில்நுட்பம் சார்ந்த முன்னேற்றங்களை நோக்கி செல்கிறது. அதிக அளவிலான ரோபோடிக் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவதால், செலவுகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ரோபோடிக் அறுவை சிகிச்சையை அணுகும் வகையில் மாற்றும்.

இந்த தொழில்நுட்பம் அறுவை சிகிச்சையின் துல்லியம் மற்றும் வரும்காலத்தில் அனைவரும் அணுகும் வகையில் உள்ளது; 5ஜி தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் முன்னேற்றத்துடன், நிபுணத்துவம் வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் சென்னையில் இருந்து திருச்சி வரை அல்லது உலகளவில் எங்கும் தொலைதூரத்தில் செயல்பட முடியும் என்று தெரிவித்தார்.

கிளெனேகிள்ஸ் ஹெல்த்கேர் இந்தியா தலைமை செயல் அதிகாரி அனுராக் யாதவ் கூறுகையில், தொழில்நுட்ப திறமைக்கு அப்பால், ரோபோடிக் அறுவை சிகிச்சையை ஏற்றுக்கொள்வது மருத்துவ தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

எங்களின் கிளெனேகிள்ஸ் ஹெல்த்கேர் இந்தியா மூலம் 100க்கும் மேற்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து, எங்கள் மருத்துவமனை சிறந்த மருத்துவமனை என்று நாங்கள் நிரூபித்துள்ளோம் என்று தெரிவித்தார்.

The post ஓராண்டில் 100க்கும் மேற்பட்ட ரோபோடிக் உதவியுடன் புற்றுநோய் அறுவை சிகிச்சை: கிளெனேகிள்ஸ் ஹெல்த்சிட்டி சாதனை: விழாவில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Gleneagles Health City ,Kamal Haasan ,Chennai ,Gleneagles Health City Hospital ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED முன்னோக்கி சிந்தித்தவர் பெரியார்: கமல்ஹாசன் பதிவு