×

சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் திறந்தவெளி நிலங்களில் 23 புதிய பூங்கா: பணிகள் தீவிரம்

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பசுமை சென்னை, கலாச்சாரம் மிகு சென்னை,  தூய்மை சென்னை, நீர்மிகு சென்னை, எழில்மிகு சென்னை, நலம்மிகு சென்னை,  கல்விமிகு சென்னை உள்ளிட்ட பல்வேறு பணிகள்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ராட்சத  ராட்டினங்களை உள்ளடக்கிய பூங்காக்களை உருவாக்குதல், கடற்கரை சாலைகளை  அழகுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மூலம் சுற்றுலாவை ஊக்குவிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் குழந்தைகளை குதூகலப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி பூங்காக்களை மேம்படுத்தும் திட்டமும் இணைந்துள்ளது. அதன் அடிப்டையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய பூங்காக்கள் அமைத்தல்  மற்றும் பூங்காக்களை மேம்படுத்த சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் 28  பணிகளுக்கு அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டு ரூ.24.43 கோடி ஒதுக்கீடு  செய்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் சார்பில் அரசாணை  வெளியிடப்பட்டது.     இதில், 23 பூங்காக்கள் ரூ.18.48 கோடி  மதிப்பில் புதிதாக அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. 5 பூங்காக்கள் ரூ.5.95 கோடி  மதிப்பீட்டில் மேம்படுத்தப்படுத்துவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டன. மேலும் பராமரிப்பில்லாமல் கிடந்த பூங்காக்களை நவீனப்படுத்தவும், எழிலூட்டவும் நிதி ஒதுக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.   புதிதாக அமைக்கப்பட்டு வரும் 23 பூங்காக்களில்  பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபாதை, குழந்தைகள் விளையாட்டு பகுதி,  திறந்த வெளியில் உடற்பயிற்சி கருவிகள், சுற்றுச்சுவர்களில் வண்ணமயமான  ஓவியங்கள், புல் தரைகள், காலை மற்றும் மாலை நேர நடைபயிற்சி, பொதுமக்களுக்கான கழிவறை மற்றும் குடிநீர் வசதி,  மின்விளக்குகள் உட்பட பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேப்பியர் பாலம் அருகிலுள்ள திறந்தவெளி 2.5 கிலோ மீட்டர் நீளமுள்ள மெரினா கடற்கரையில் நடைபாதை அருகில் உள்ள இடம், டர்ன்புல்ஸ் சாலை சந்திப்பில் உள்ள திறந்தவெளி நிலம், கோட்டூர்புரம், சித்ரா நகர், காந்திமண்டபம் ஆகிய இடங்களில் உள்ள திறந்தவெளி நிலம் ஆகியவை பூங்காக்களாக உருவாக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம், கால்வாய்க்கரை நடைபாதை, நீரூற்று சிறுவர் விளையாட்டு சாதனங்கள் அழகிய வண்ணச்செடிகள் ஆகியவைகளுடன் அழகிய பூங்கா  உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கொடுங்கையூரில் உள்ள  வடசென்னை குப்பை கொட்டும் வளாகத்தின் வெளியில் அழகிய பசுமை மயமாக மாற்றப்படவுள்ளது, என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். …

The post சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் திறந்தவெளி நிலங்களில் 23 புதிய பூங்கா: பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Green Chennai ,Culture ,Migu Chennai ,Purity ,Corporation of Chennai ,Sinkara ,
× RELATED கலை பண்பாட்டுத் துறையின் கீழ்...