×

கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது

டிரான்சில்வேனியா: சூரி, அன்னா பென் நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ படம் சர்வதேச திரைப்பட விருதை பெற்றுள்ளது. ‘விடுதலை’, ‘கருடன்’ படங்களுக்கு பிறகு சூரி, கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‘கொட்டுக்காளி’. இதில் மலையாள நடிகை அன்னா பென் ஹீரோயினாக நடிக்கிறார். ‘கனா’, ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’, ‘வாழ்’, ‘டாக்டர்’ மற்றும் ‘டான்’ போன்ற படங்களை தயாரித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தையும் தயாரித்துள்ளார். பி.எஸ். வினோத் ராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பியுள்ளனர்.

இன்னும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்றாலும், பல பன்னாட்டு திரைப்பட விழாக்களில் இந்த திரைப்படம் தொடர்ச்சியாக பல சாதனைகளை படைத்து வருகிறது. இந்நிலையில் இப்படம் படைத்துள்ள ஒரு புதிய சாதனை குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவினை வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். அவர் வெளியிட்ட தகவலின்படி, ‘டிரான்சில்வேனியா நாட்டில் நடைபெறும் திரைப்பட விழாவில் எங்களது ‘கொட்டுக்காளி’ திரைப்படம் ஸ்பெஷல் ஜூரி விருது பெற்று அசத்தியுள்ளது. படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்’ என தெவித்துள்ளார்.

The post கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kotukkali ,Transylvania ,Suri ,Anna Ben ,Kana ,Nenjam ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சூரி ஃபிட்னெஸ் ட்ரிக்ஸ்!