×

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கே.பாலகிருஷ்ணன் சந்திப்பு: கோரிக்கை மனு அளித்தார்

சென்னை: தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சந்தித்தார். அப்போது, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். சந்திப்புக்கு பின் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தமிழக மக்களின் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக முதல்வரை சந்தித்து பேசி மனுக்களை அளித்துள்ளேன். அரியலூர்  ஜெயங்கொண்டத்தில் விவசாயிகளிடம் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என போராட்டிக்கொண்டிருந்தோம். சமீபத்தில் தமிழக அரசு இந்த நிலங்களை ஏற்கனவே நில உடமையாளர்களுக்கு திருப்பி அளிப்பது என அரசு முடிவு எடுத்து, அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கி இருந்தாலும் கூட அந்த நிலத்தை அவர்கள் எடுத்துக்கொள்ளலாம் என அரசு வெளியிட்டிருப்பது மிகப்பெரிய சாதனை ஆகும். இதற்காக முதல்வரிடத்தில் நன்றி தெரிவித்தோம். நீர்நிலை புறம்போக்கு குறித்தும் பேசியுள்ளோம். நீர்நிலை புறம்போக்கு என்பதால் அங்குள்ள வீடுகளை இடிக்க கூடாது என நீதிமன்றத்தில் அரசு வழுவாக தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளோம்.மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் அரசு பாத்துக்கொள்ளும் என முதல்வர் உறுதியளித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் இரண்டு தீர்ப்புகள் வெளிவந்துள்ளது. அதாவது, வன சரணாலயங்கள் என அறிவிக்கப்பட்ட இடங்களில் மாடுகள் மேய்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது வனங்களில் மாடுகளை வைத்துள்ள மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும், தேனி மாவட்டத்தில் 8 ஊராட்சிகளை காலி செய்வது என்றும் வழங்கியுள்ள தீர்ப்பிற்கு மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளோம்.இதேபோல், கலைஞர் முதல்வராக இருந்த போது மருத்துவர்களுக்கு வெளியிடப்பட்ட அரசாணையின் படி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். இதை முதல்வர் ஏற்றுக்கொண்டுள்ளார் .இவ்வாறு கூறினார்….

The post முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கே.பாலகிருஷ்ணன் சந்திப்பு: கோரிக்கை மனு அளித்தார் appeared first on Dinakaran.

Tags : K. Balakrishnan ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Marxist ,M. K. Stalin ,K.Balakrishnan ,Dinakaran ,
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...