×

திருவில்லிபுத்தூர் திருப்பாற்கடல் குளத்தில் படகு குழாம் அமைக்கும் பணி விறுவிறு

திருவில்லிபுத்தூர் : திருவில்லிபுத்தூரில் உள்ள திருப்பாற்கடல் குளத்தில் படகு குழாம்  அமைக்கும் பணி மற்றும் நடைபாதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருவில்லிபுத்தூரில்  நகராட்சி அலுவலகம் அருகே திருப்பாற்கடல் குளம் உள்ளது. இந்த  குளப்பகுதியில் நடைபாதை மற்றும் படகு குழாம் அமைக்க வேண்டும் என நகர்  பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதை நிறைவேற்றும்  வகையில், நகராட்சி சார்பில் ரூ.1 கோடியே 7 லட்சம் மதிப்பில், புதிதாக  நடைபாதை பூங்கா மற்றும் படகு குழாம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான  பூமிபூஜை நடைபெற்றது. இதில், நகர்மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன் மற்றும்  நகராட்சி ஆணையர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில், குளப்பகுதியில்  நடைபாதை பூங்கா மற்றும் படகு குழாம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று  வருகிறது. முதற்கட்டமாக குளத்தில் ஜேசிபி மூலம் சீரமைக்கும் பணிகள் நடந்து  வருகின்றன….

The post திருவில்லிபுத்தூர் திருப்பாற்கடல் குளத்தில் படகு குழாம் அமைக்கும் பணி விறுவிறு appeared first on Dinakaran.

Tags : Thiruvilliputhur ,Tirupalakadal pond ,Tiruvilliputhur ,
× RELATED செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம்