×

கிடாமுட்டு சண்டை நடத்துவது அடிப்படை உரிமையில்லை: ஐகோர்ட் கிளை

மதுரை: கிடாமுட்டு சண்டை நடத்துவது அடிப்படை உரிமையில்லை என்று ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது. தேனி மாவட்டம் கம்பத்தில் மணிக்கட்டி ஆலமபர பகுதியில் மிடாமுட்டு சண்டை நடத்த அனுமதி கோரி முகைதீன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் தேனி மாவட்டம் கம்பம் ஆலமபர பகுதியில் வரும் ஜூன் 26ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை கிடாமுட்டு சண்டை நடத்த கம்பம் டவுன் காவல்நிலையத்தில் அனுமதி கேட்டு 8ம் தேதி மனு அளித்ததாகவும், இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே 26ம் தேதி கிடாமுட்டு சண்டை அனுமதி வழங்கிட உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர்; ஏற்கனவே இந்த பகுதிகளில் 2 முறை கிடாமுட்டு சண்டை நடத்த அனுமதி கேட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த போட்டிக்கு அனுமதி வழங்கும் பட்சத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிடாமுட்டு சண்டை நடத்த அனுமதி கோருவது எப்படி பொதுநல வழக்காக தாக்கல் செய்ய முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கிடாமுட்டு சண்டையை கண்டிப்பாக நடத்த வேண்டும் என அடிப்படை உரிமையாக கோர முடியாது எனவும் இதை பொதுநல வழக்காக எடுத்து விசாரிக்க முடியாது எனவும் இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்….

The post கிடாமுட்டு சண்டை நடத்துவது அடிப்படை உரிமையில்லை: ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.

Tags : Kidamutu ,ICourt branch ,Madurai ,Theni District ,Kampatil Manikatti ,Kidamuttu ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி அருகே அரசின் 1 ஏக்கர்...