- ராமோஜி ராவ்
- ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி
- திருமலா
- ராமோஜி ராவ்
- ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி
- ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி
- ஹைதராபாத், தெலுங்கானா
- செரேகுரு ராமோஜி ராவ்
- ராமோஜி பிலிம் சிட்டி
- ராமோஜி குரூப்
- ராமோஜிராவ் மரணம்
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
திருமலை: ராமோஜிராவ் பிலிம் சிட்டியின் நிறுவனர் ராமோஜி ராவ் காலமானார். அவருக்கு வயது 87. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ளது ராமோஜிராவ் பிலிம்சிட்டி. ராமோஜி பிலிம்சிட்டி மற்றும் ராமோஜி குழும நிறுவனங்களின் தலைவர் செருகுரு ராமோஜிராவ். இவருக்கு வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 4.50 மணிக்கு இறந்தார். இதையடுத்து ராமோஜிராவின் உடல் பிலிம் சிட்டியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பல மாநில முதல்வர்கள், கவர்னர்கள், திரைப்பட பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மறைந்த ராமோஜிராவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது. அவரது மறைவுக்கு ரஜினிகாந்த் உள்பட திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் இரங்கல் : ராமோஜி குழும நிறுவனர் பத்ம விபூஷன் ராமோஜி ராவ் மறைவு செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். ஊடகம், இதழியல், திரைப்பட துறைகளுக்கு ஆற்றிய பெரும் பங்களிப்புகள் வழியே என்றென்றும் நிலைத்திருக்கும் மரபை அவர் விட்டு சென்றுள்ளார். இந்த துயர்மிகு நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
The post ராமோஜிராவ் பிலிம் சிட்டியின் நிறுவனர் ராமோஜிராவ் மரணம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.