×

பாலிவுட் போகிறார் ஸ்ரீலீலா

ஐதராபாத்: பாலிவுட் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் ஸ்ரீலீலா. தெலுங்கில் ‘குண்டூர் காரம்’ படத்தில் மகேஷ் பாபுவுடன் நடித்திருந்தார் ஸ்ரீலீலா. இந்த படத்துக்கு பிறகு அவருக்கு பல மொழிகளிலும் வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன. அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் 3 ஹீரோயின்களில் இவரும் ஒருவராக இருப்பார் எனத் தெரிகிறது. இதில் நடிப்பது பற்றி இவரிடம் பேச்சு நடக்கிறது. இதற்கிடையில் இப்போது இந்தியிலும் லீலா அறிமுகம் ஆகிறார்.

சைப் அலிகானின் மகன் இப்ராஹிம் அலிகான் நடிக்கும் படத்தை குணால் தேஷ்முக் இயக்குகிறார். இதில்தான் ஸ்ரீலீலா ஹீரோயினாக நடிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தபடி சில தென்னிந்திய நடிகைகள், இந்தியிலும் நடிக்கிறார்கள். அவர்களின் பட்டியலில் லீலாவும் சேர்ந்துள்ளார். இப்படத்துக்கு ‘திலேர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஸ்போர்ட்ஸ் படமாக இது உருவாகிறதாம்.

The post பாலிவுட் போகிறார் ஸ்ரீலீலா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Srileela ,Bollywood ,Hyderabad ,Mahesh Babu ,Ajith ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ராக்கி சாவந்துக்கு செக்ஸ் டார்ச்சர்...