×

சென்சார் எதிர்ப்பால் வடக்கன் தலைப்பு ரயில் ஆனது

சென்னை: பாரதி சக்தி இயக்கத்தில் குங்குமராஜ் முத்துசாமி, வைர மாலா, ரமேஷ் வைத்யா, சமீரா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜனனி இசையில் உருவாகியுள்ள படம் ‘வடக்கன்’. இந்த படம் சென்சாரில் தணிக்கைக்கு போனதும் பிரச்னையில் சிக்கியது. காட்சிகளில் நீக்கம், வசனம் மியூட் உள்ளிட்ட சிக்கல்கள் எழவில்லை. ஆனால் ‘வடக்கன்’ தலைப்புக்கு சென்சார் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கடந்த மே 24ம் தேதி வெளியாக இருந்த இப்படம் தள்ளிப்போனது.

தமிழ்நாட்டில் நுழைந்திருக்கும் வட இந்தியர்களால் தமிழர்களுக்கு ஆபத்து இருப்பதுபோல் இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதனாலேயே படத்துக்கு வடக்கன் என தலைப்பு வைத்திருக்கிறார்கள். சென்சார் எதிர்ப்பு காரணமாக, தற்போது இந்த படத்திற்கு ‘ரயில்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிஸ்கவரி சினிமாஸ் தெரிவித்துள்ளது.

 

The post சென்சார் எதிர்ப்பால் வடக்கன் தலைப்பு ரயில் ஆனது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Bharati Shakti ,Kunkumaraj Muthusamy ,Vaira Mala ,Ramesh Vaidya ,Samira ,Vatakkan ,Janani ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு...