×

மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு

சென்னை: திரைக்கு வந்திருந்த ‘தீக்குளிக்கும் பச்சை மரம்’ என்ற படத்தை இயக்கிய வினீஷ் மில்லினியம் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம், ‘ஜோரா கைய தட்டுங்க’. வாமா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜாஹிர் அலி தயாரிக்க, சரவணா பிலிம் ஆர்ட்ஸ் சார்பில் சரவணன் இணை தயாரிப்பு செய்கிறார். மாறுபட்ட மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் ஹரீஷ் பெராடி, ‘விக்ரம்’ வாசந்தி, ஜாஹிர் அலி, மணிமாறன், சாந்தி தேவி, மேனகா, நைரா, ‘அருவி’ பாலா, மூர், தர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி வெளியிட்டார். தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் மது அம்பட் ஒளிப்பதிவு செய்ய, எஸ்.என்.அருணகிரி இசை அமைக்கிறார். தேசிய விருது பெற்ற சாபு ஜோசப் எடிட்டிங் செய்கிறார். ஜித்தன் ரோஷன் பின்னணி இசை அமைக்கிறார். யோகி பாபுவுக்கு இப்படம் திருப்புமுனையாக அமையும் என்று படக்குழு தெரிவித்தது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது.

 

The post மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Yogi Babu ,CHENNAI ,Vinesh Millennium ,Zahir Ali ,Wama Entertainment ,Saravanan ,Saravana Film Arts ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஜூலை 26 முதல் ராதாமோகனின் சட்னி சாம்பார் சீரிஸ் !!