×

மூக்குத்தி அம்மன் 2; மீண்டும் அம்மனாக நடிக்க நயன்தாரா மறுப்பு

சென்னை: ‘மூக்குத்தி அம்மன்’ பாகம் 2ல் நடிக்க நயன்தாரா மறுத்துவிட்டார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்த படம் ‘மூக்குத்தி அம்மன்’. இதில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்திருந்தார். அம்மனாக நடிப்பதற்காக படப்பிடிப்பு சமயங்களில் விரதம் இருந்து நயன்தாரா பயபக்தியுடன் நடித்தார். படம் ஓடிடியில் வெளியானது. அதன் பிறகு படத்தில் இந்து மதத்தை புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதன் பிறகு ‘அன்னபூரணி’ என்ற படத்தில் நயன்தாரா நடித்தார். அதில், பிராமணப் பெண் நமாஸ் படிப்பது போன்றும், அசைவம் சாப்பிடுவது போன்றும் காட்சிகள் இருந்தன.

அதிலும் இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் நயன்தாரா நடித்துவிட்டதாக பாஜவினர் புகார் அளித்தனர். நயன்தாரா மீது போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து நெட்பிளிக்சிலிருந்து அப்படம் நீக்கப்பட்டது.
இந்நிலையில் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை இயக்க தயாராகி வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி. முதல் பாகத்தில் நடித்த நயன்தாராவிடம் அவர் கால்ஷீட் கேட்டிருந்தார். ஆனால் கதை கூட கேட்காமல் இதில் நடிக்க நயன்தாரா மறுத்துவிட்டாராம். தொடர்ந்து இந்து மதத்தை விமர்சிக்கும் படங்களில் நடிப்பதாக பிரச்னை எழுந்துள்ளதால் இதில் நடிக்க அவர் மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ஹீரோயின் வேடத்தில் நடிக்க திரிஷாவிடம் பேசி வருகிறார்கள்.

 

The post மூக்குத்தி அம்மன் 2; மீண்டும் அம்மனாக நடிக்க நயன்தாரா மறுப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Nozokuti Amman ,Nayanthara ,Amman ,Chennai ,RJ Balaji ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மூக்குத்தி அம்மன் 2 உருவாகிறது