×

வீடு புகுந்து மாஜி காதலியை கத்தியால் குத்திய ஹாலிவுட் நடிகர் கைது

லாஸ் ஏஞ்சல்ஸ்: வீடு புகுந்து மாஜி காதலியை கத்தியால் குத்திய ஹாலிவுட் நடிகர் கைது செய்யப்பட்டார். ஹாலிவுட் நடிகர் நிக் பாஸ்குவல் (34), பெண் மேக்கப் கலைஞரும் தனது முன்னாள் காதலியுமான அல்லி ஷெஹாரன் என்பவரை சந்திக்க, அவரது சன்லேண்ட் இல்லத்திற்கு சென்றார். அப்போது திடீரென அல்லி ஷெஹாரனை பலமுறை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பினார். தகவலறிந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் சரிந்த அல்லி ஷெஹாரனை மீட்டு மருத்துமனையில் அனுமதித்தனர்.

இதற்கிடையே லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார், நிக் பாஸ்குவலை பல இடங்களில் வலைவீசி தேடினர். இந்நிலையில் டெக்சாஸில் உள்ள யு.எஸ்-மெக்சிகோ எல்லை சோதனைச் சாவடியின் வழியாக தப்பியோட முயன்ற நிக் பாஸ்குவலை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘அல்லி ஷெஹரான் கவலைக்கிடமாக இருக்கிறார். கைதான நிக் பாஸ்குவலிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.

 

The post வீடு புகுந்து மாஜி காதலியை கத்தியால் குத்திய ஹாலிவுட் நடிகர் கைது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Hollywood ,Los Angeles ,Nick Pascual ,Sunland ,Ally Sheharan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அமெரிக்காவில் ஹாலிவுட் நடிகர்...