×

பணமோசடி வழக்கில் கைதான டெல்லி அமைச்சருக்கு 14 நாள் காவல் நீட்டிப்பு

புதுடெல்லி: பணமோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு 14 நாள் காவலை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், கொல்கத்தாவை சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து ஹவாலா பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த 30ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். தொடர்ந்து 9ம் தேதி வரை அவர் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார். பின்னர் அமலாக்கத்துறை வேண்டுகோளின்படி மீண்டும் அவரது காவல் நேற்று வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று காலை அவர் டெல்லி ரவுஸ் அவின்யூவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே, தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று சத்யேந்தர் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது….

The post பணமோசடி வழக்கில் கைதான டெல்லி அமைச்சருக்கு 14 நாள் காவல் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi minister ,New Delhi ,Delhi ,Satyender Jain ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு