×

மகேஷ் பாபு, ராஜமவுலிக்காக 15 வருடம் காத்திருந்தேன்: தயாரிப்பாளர் உருக்கம்

ஐதராபாத்: மகேஷ் பாபு, ராஜமவுலி கால்ஷீட்டுக்காக 15 வருடங்கள் காத்திருந்தேன் என்றார் தயாரிப்பாளர் கே.எல்.நாராயணா. துர்கா ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் பல தெலுங்கு படங்களை தயாரித்தவர் கே.எல்.நாராயணா. இவர் இப்போது மகேஷ் பாபு நடிப்பில் ராஜமவுலி இயக்கும் பான் இந்தியா படத்தை தயாரிக்கிறார். இந்த ஆண்டில் தென் ஆப்ரிக்கா காடுகளில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இது பற்றி நாராயணா கூறும்போது, ‘15 வருடத்துக்கு முன் மகேஷ் பாபு நடிப்பில் ராஜமவுலி இயக்க ஒரு படம் தயாரிக்க இருந்தேன். அதற்காக இருவருக்குமே அட்வான்ஸ் பணத்தை கொடுத்துவிட்டேன்.

அப்போது வெவ்வேறு படங்களில் பிசியானதால் இருவரும் சேர்ந்து பணியாற்ற நேரம் அமையவில்லை. இது இப்போதுதான் நடந்திருக்கிறது. மகேஷ் பாபு ஒரு சூப்பர் ஸ்டார். அவர் நினைத்திருந்தால் எனது அட்வான்ஸை திருப்பி கொடுத்துவிட்டு போயிருக்கலாம். அதேபோல் ராஜமவுலிக்கு ஹாலிவுட்டில் பணியாற்றும் வாய்ப்புகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் வாக்கு கொடுத்துவிட்டோம் என்பதற்காக இவர்கள் எனக்காக படம் செய்து தர ஒப்புக்கொண்டிருப்பது என்னை பெருமைப்படுத்தும் விதமாக அமைந்துவிட்டது’ என உருக்கமாக கூறியுள்ளார்.

The post மகேஷ் பாபு, ராஜமவுலிக்காக 15 வருடம் காத்திருந்தேன்: தயாரிப்பாளர் உருக்கம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mahesh Babu ,Urukam ,Hyderabad ,Rajamouli Callsheet ,KL Narayana ,Durga Arts Production Company ,Rajamouli ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ரயில் நிலையம் அருகே...