×

உத்திரமேரூர் அருகே குடிசை வீடு எரிந்து நாசம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே குடிசை வீட்டில் தீவிபத்து ஏற்பட்டு ₹ 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின. உத்திரமேரூர் அருகே பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர் பரசுராமன் (65) கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்லம்மாள் இருவரும் குடிசை வீட்டில் தனிமையில் வசித்து வருகின்றனர். கணவன், மனைவி இருவரும் நேற்று காலை வீட்டைப் பூட்டிவிட்டு சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் திடீரென வீட்டின் ஒரு பகுதி தீப்பிடித்து எரியத் துவங்கியது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உத்திரமேரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர், அதற்குள்ளாக தீ மளமளவென பரவி வீடு முழுவதும் எரிந்து நாசமானது. இந்த தீவிபத்தில் சுமார் ₹ 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகிறது. இது குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது….

The post உத்திரமேரூர் அருகே குடிசை வீடு எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : Uttramerur ,Nasam ,
× RELATED பல ஆண்டுகளாக தொடரும் இருதரப்பு...