×

கங்கனபள்ளி அருகே நசீர் கார்டன் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் சுகாதார சீர்க்கேட்டில் தவிக்கும் மக்கள்-அதிகாரிகள் நடவடிக்கைக்கு கோரிக்கை

சித்தூர் : சித்தூர் அடுத்த கங்கனபள்ளி அருகே நசீர் கார்டன் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் துர்நாற்றத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அவதி படுகின்றனர். கால்வாய் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். சித்தூர் அடுத்த கங்கனபள்ளி அருகே நசீர் கார்டன் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதிமக்கள் கூறியதாவது: எங்கள் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. எங்கள் பகுதியில் சாலை வசதி இல்லாமலும், கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாமலும், குடிநீர் வசதி இல்லாமலும் எங்கள் பகுதியை சேர்ந்த மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி கவுன்சிலர், சித்தூர் எம்எல்ஏவிடம் பலமுறை புகார் தெரிவித்தும் யாரும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர்கள் சாலையோரம் தேங்கி கிடப்பதால் எங்கள் பகுதியை சேர்ந்த மக்கள் துர்நாற்றத்தால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் கழிவு நீர் தேங்கி கிடப்பதால் எங்கள் பகுதியை சேர்ந்த மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட காரணமாக உள்ளது. மேலும், எங்கள் பகுதியில் உள்ள குழந்தைகள் தெருக்களில் விளையாட செல்வதில்லை. ஏனென்றால், துர்நாற்றத்தால் குழந்தைகள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை. மேலும், மாலை நேரங்களில் வீட்டில் ஜன்னல்கள் கதவுகள் அனைத்தும் மூடி விட வேண்டும்.இல்லை என்றால் கொசு தொல்லையால் எங்கள் பகுதி மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். கொசுக்கள் தொல்லையால் டெங்கு, மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட நோய்கள் வர காரணமாக உள்ளது. மேலும், எங்கள் பகுதியில் சாலை வசதி இல்லாமலும் பெரும் அவதிப்பட்டு வருகிறோம். எங்கள் பகுதியில் சாலைகள் குண்டும், குழியுமாக இருக்கிறது. குடிநீர் வசதி இல்லாமலும் பெரும் அவதிப்பட்டு வருகிறோம். முதியவர்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு ஏதாவது நோய் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு செல்ல கூட சாலை வசதி இல்லாமல் பெரும் அவதிப்பட்டு வருகிறோம். ஆகவே, இனியாவது மாநகராட்சி அதிகாரிகள், எம்எல்ஏ உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதியில் கழிவுநீர் கால்வாயை அமைத்து சீர் செய்ய வேண்டும். அதேபோல், குடிநீர் வசதி சாலை வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தி தர வேண்டும். இல்லை என்றால் எங்கள் பகுதியை சேர்ந்த மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாநகராட்சி அலுவலகத்தையும் மற்றும் எம்எல்ஏ அலுவலகத்தையும் முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர். …

The post கங்கனபள்ளி அருகே நசீர் கார்டன் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் சுகாதார சீர்க்கேட்டில் தவிக்கும் மக்கள்-அதிகாரிகள் நடவடிக்கைக்கு கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Naseer Garden ,Kanganapalli ,Chittoor ,Ganganapschool ,Dinakaran ,
× RELATED சித்தூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்