×

கட்டப்பா மாதிரி வெப்பன் கேரக்டரும் பேசப்படும்: சத்யராஜ்

சென்னை: மில்லியன் ஸ்டுடியோ புரொடக்‌ஷன்ஸ் சார்பில் எம்.எஸ்.மன்சூர் வழங்க, குகன் சென்னியப்பன் இயக்கியுள்ள படம், ’வெப்பன்’. பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சத்யராஜ், வசந்த் ரவி, தான்யா ஹோப் நடித்துள்ளனர். படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் சத்யராஜ் பேசும்போது, ‘திரையில் காட்டுவதை விட, தரையில் அதிக வீரத்தைக் காட்டுவதுதான் சூப்பர் ஹீரோ. இதுபோன்ற படத்துக்கு அதிக பட்ஜெட் தேவைப்படும். இப்படத்தின் இரண்டு ஹீரோக்கள் தயாரிப்பாளர் மன்சூரும், இயக்குனர் குகனும்தான். தொழில்நுட்ப ரீதியாக இப்படம் வித்தியாசமாக இருக்கும். ‘பாகுபலி’ கட்டப்பா போல் இதிலும் என் கேரக்டர் காலத்தால் அழிக்க முடியாத ஒன்றாக இருக்கும்’ என்றார்.

பிறகு வசந்த் ரவி பேசுகையில், ‘தமிழில் சூப்பர் ஹியூமன் கதையைப் படமாக்குவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதை குகன் விரும்பிச் செய்துள்ளார். சிறுவயதில் இருந்தே நிறைய காமிக்ஸ் கதைகளைப் படித்து வளர்ந்ததால், சினிமாவில் அதைச் செய்ய வேண்டும் என்று ‘வெப்பன்’ படத்தை அவர் இயக்கியுள்ளார். ’ராக்கி’யில் பாரதிராஜா சாருடனும், ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிகாந்த் சாருடனும் நான் நடித்தபோது, அவர்களிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். அதுபோல், சத்யராஜ் சாரிடமும் நிறைய கற்றுக்கொண்டேன். சூப்பர் ஹூயூமன் என்பது புது ஜானர். ஹாலிவுட் படங்களைப் போல் ‘வெப்பன்’ படத்தைப் பாருங்கள். இது ப்ரீகுவல்தான். இந்தக் கதைக்கு குகன் ஒரு யுனிவர்ஸே வைத்துள்ளார்’ என்றார்.

The post கட்டப்பா மாதிரி வெப்பன் கேரக்டரும் பேசப்படும்: சத்யராஜ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kattappa ,Sathyaraj ,CHENNAI ,Gugan Chenniappan ,MS Mansoor ,Million Studio Productions ,Prabhu Raghav ,Vasant Ravi ,Tanya Hope ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இது வாயில வடை சுடுற கதை இல்ல - Sathyaraj Speech at Weapon Trailer Launch | Dinakaran news.